வெவ்வேறு விபத்துகளில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி
வெவ்வேறு விபத்துகளில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
திருவரங்குளம்,
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள கலிபுல்லாநகரை சேர்ந்தவர் அப்துல்கலாம். இவரது மகன் முகமதுஆரிஸ் (வயது 19). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளில், தனது நண்பரை ஏற்றி கொண்டு திருவரங்குளம் சென்று அவரை இறக்கி விட்டார். பின்னர் அதேமோட்டார் சைக்கிளில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். திருவரங்குளம் வம்பன் அருகே வந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட முகமதுஆரிஸ் படுகாயமடைந்தார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முகமது ஆரிசை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இந்த விபத்து குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விராலிமலை ஒன்றியம், வாணதிராயன் பட்டியை சேர்ந்தவர் மூக்கன். இவரது மகன் பாலகிருஷ்ணன்(வயது24). இவர் நேற்று முன்தினம் இரவு விராலி மலைக்கு வந்தார். பின்னர் தனது வீட்டிற்கு செல்வதற்காக திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது திருச்சியிலிருந்து மதுரை நோக்கி சென்ற கார் ஒன்று எதிர்பாராத விதமாக பாலகிருஷ்ணன் மீது மோதியது. இதில் பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் பாலகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் தஞ்சாவூர் பாலகிருஷ்ணா நகரை சேர்ந்த சபிபுல்லா(26) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.