டாஸ்மாக் கடையில் ரூ.4 லட்சம் மதுபாட்டில்களை திருடிய 2 பேர் கைது
அரவக்குறிச்சி அருகே டாஸ்மாக் கடையில் ரூ.4 லட்சம் மதுபாட்டில்களை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்து மதுபாட்டில்கள், வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
அரவக்குறிச்சி,
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே வெஞ்சமாங்கூடலூரில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் கடந்த டிசம்பர் மாதம் மர்மநபர்கள் ரூ.4 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை திருடி சென்றனர். இது தொடர்பாக அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் உத்தரவின் பேரில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் அரவக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ்செல்வன் அறிவுரையின் பேரில் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் மதுப்பாட்டில்களை திருடிய திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியை சேர்ந்த சுந்தரமூர்த்தி (வயது35), முத்து (40) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து திருடு போன ரூ.4 லட்சம் மதிப்பிலான மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனர். திருடிய மதுப்பாட்டில்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட சரக்கு வேன், கார் ஆகிய 2 வாகனங்களை கைப்பற்றினர். கைதானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.