வலம்புரிவிளை குப்பை கிடங்கில் தீ விபத்து பிளாஸ்டிக் கழிவுகள் எரிந்து நாசம்
நாகர்கோவில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் தீ விபத்து நடந்தது. அங்கு ஒரு அறையில் வைத்திருந்த பிளாஸ்டிக் கழிவுகள் தீயில் எரிந்து நாசமாகின.
நாகர்கோவில்,
நாகர்கோவில் பீச்ரோடு வலம்புரிவிளையில் குப்பை கிடங்கு உள்ளது. இங்கு, நாகர்கோவில் நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் இங்கு குப்பைகள் மலைபோல குவிந்து கிடக்கிறது. இந்த குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்படும். இங்கு ஏதாவது ஒரு பகுதியில் தீ பிடித்துவிட்டால், அது மளமளவென பரவிக்கொண்டே இருக்கும். இதனால் குப்பைகளில் பற்றி எரியும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் படாதபாடு படுவார்கள்.
இதனால் குப்பை கிடங்கில் பிளாஸ்டிக் கழிவுகளை வைப்பதற்காக ஒரு அறை உள்ளது. இந்த அறையில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் மறுசுழற்சிக்காக அனுப்பப்படும்.
இந்த நிலையில் வலம்புரிவிளை குப்பை கிடங்கில் பிளாஸ்டிக் கழிவுகள் வைத்திருந்த அறையில் நேற்று காலை திடீரென தீப்பிடித்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் பிளாஸ்டிக் கழிவுகள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது.
பிளாஸ்டிக் கழிவுகளில் பிடித்த தீ அதிர்ஷ்டவசமாக குப்பைகளுக்கு பரவவில்லை. தீயணைப்பு படை வீரர்கள் துரிதமாக செயல்பட்டதால் குப்பைகளில் தீப்பிடிக்காமல் தடுக்கப்பட்டது. பிளாஸ்டிக் கழிவுகளில் தீப்பிடித்ததற்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. இதுதொடர்பாக நகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.