பச்சிளம் குழந்தையை கையாளும் விதம்
பச்சிளம் குழந்தைகளின் சருமம் மிருதுவாகவும், மென்மையாகவும் இருக்கும். அதனால் குழந்தை பராமரிப்புக்கு கூடுதல் கவனம் செலுத்தவேண்டியிருக்கும்.;
பச்சிளம் குழந்தைகளின் சருமம் மிருதுவாகவும், மென்மையாகவும் இருக்கும். அதனால் குழந்தை பராமரிப்புக்கு கூடுதல் கவனம் செலுத்தவேண்டியிருக்கும்.
குறிப்பாக குழந்தையின் முதுகெலும்பு பகுதி வலுவாக இருக்காது. அதன் காரணமாக தலை பாரத்தை சுமக்கும் வலிமை கொண்டிருக்காது. தொட்டிலில் இருந்து தூக்கும்போது கவனமாக கையாள வேண்டும். மற்றவர்கள் கொஞ்சுவதற்கு தூக்கும்போதும் குழந்தையின் தலைப்பகுதியை தாங்கி பிடிக்கும் வகையில் கைகளை வைத்திருக்கிறார்களா? என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்தால் அதற்கு பசி மட்டுமே காரணமாக இருக்காது. சோர்வாகவோ, அசவு கரியமாகவோ இருந்தால் அழுகையின் மூலமே வெளிப்படுத்தும். அதனை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். தூங்கும் நேரம் அதிகமாக இருப்பதே அதன் உடல் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். ஆதலால் பச்சிளம் குழந்தையின் தூக்கத்திற்கு இடையூறாக இருக்கும் விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
குழந்தைக்கு குறிப்பிட்ட நேர இடைவெளியில் தாய்ப்பால் கொடுப்பதை வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். அந்த நேர வரை முறையில் இடைவெளி விழுந்துவிடக் கூடாது. நேரம் தவறாமல் பசியை போக்குவது அதன் ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். உடல் எடை அதிகரிப்புக்கும், வளர்ச்சிக்கும் துணை புரியும்.
குழந்தையை கொஞ்சும்போது தூக்கிப்பிடித்தோ, குலுக்கவோ கூடாது. அது குழந்தைக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும். குளிப்பாட்டும்போதும் கவனமாக கையாள வேண்டும். வெதுவெதுப்பான நீரில்தான் குளிக்க வைக்க வேண்டும். ஆரம்ப நாட்களில் ஸ்பாஞ்சுகளை பயன்படுத்துவது சிறப்பானது. மிருதுவான சருமமாக இருக்கும் என்பதால் அதற்கேற்ற மென்மையான சோப்பு மற்றும் எண்ணெய்யை உபயோகிக்க வேண்டும். காதுகளிலோ, மூக்கிலோ தண்ணீர் உட்புகாதபடி கவனமாக குளிக்க வைக்க வேண்டும். குழந்தையின் ஆழ்ந்த தூக்கத்திற்கு குளியல் அவசியம் என்பதால் அந்த வழக்கத்தை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். குழந்தைக்கு நோய் தொற்று ஏற்படும் பட்சத்தில் மட்டுமே குளியல் விஷயத்தில் டாக்டரிடம் கலந்தா லோசித்து முடிவெடுக்க வேண்டும்.
குழந்தையின் கைவிரல் நகங்கள் மென்மையாகவும், மெல்லியதாகவும் இருக்கும். அவை வேகமாக வளர்ந்துகொண்டே இருக்கும். வாரத்தில் இரண்டு முறையாவது கட்டாயம் நகம் வெட்ட வேண்டியிருக்கும். நகவெட்டியை உபயோகிக்கும்போது கவனமாக செயல்பட வேண்டும். குளிர் காலத்தில் பனி தாக்கங்களை கட்டுப்படுத்தும் ஆடைகளை அணிவிக்க வேண்டும்.