பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க.- கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் விழுப்புரம், திண்டிவனத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2018-01-27 23:58 GMT
விழுப்புரம்,

பஸ் கட்டண உயர்வை கண்டித்தும், கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் நேற்று தமிழகம் முழுவதும் தி.மு.க.வினரும் மற்றும் அதன் கூட்டணி கட்சியின ரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மத்திய மற்றும் தெற்கு மாவட்ட தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். தெற்கு மாவட்ட செயலாளர் அங்கையற்கண்ணி, எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், ராதாமணி, வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் சீனுவாசக்குமார், ரமேஷ், ஜெயகணேஷ், நகர தலைவர் செல்வராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவா, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் பாபு கோவிந்தராஜ், ஜெய்சங்கர், தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், மாவட்ட பொருளாளர் புகழேந்தி, துணை செயலாளர் ஜெயச்சந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜனகராஜ், நகர தலைவர் சக்கரை, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சரவணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ஆற்றலரசு, திராவிடர் கழக மாவட்ட தலைவர் சுப்புராயன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, விவசாய தொழிலாளர் கட்சி மாவட்ட செயலாளர் அன்பழகன் உள்பட பலர் கலந்துகொண்டு பஸ் கட்டண உயர்வை கண்டித்தும், கட்டண உயர்வை உடனே அரசு திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினார்கள்.

இதேபோல் திண்டிவனத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் சீதாபதி சொக்கலிங்கம், டாக்டர் மாசிலாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சேதுநாதன், செந்தமிழ்செல்வன், நிர்வாகிகள் டாக்டர் சேகர், ரமணன், வக்கீல் ஆதித்தன், ம.தி.மு.க. மாநில துணை செயலாளர் மணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சேரன், காங்கிரஸ் கட்சி நகர தலைவர் விநாயகம், வக்கீல் சுப்பையா, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் இன்பஒளி, திராவிடர் கழக மண்டல செயலாளர் தாஸ், மாவட்ட தலைவர் கந்தசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நகர செயலாளர் கமாலுதீன், மனித நேய மக்கள் கட்சி நகர செயலாளர் ஜான்பாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்