பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் மாவட்ட தி.மு.க. சார்பில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.;
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்ட தி.மு.க. சார்பில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து, திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் இ.பெரியசாமி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் அர.சக்கரபாணி, ஆண்டி அம்பலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் இ.பெரியசாமி எம்.எல்.ஏ. பேசும்போது, லஞ்சம் பெற முடியாத ஒரு துறை என்றால் அது போக்குவரத்து துறை தான். ஆனால் தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டுவதுடன், முறையான பலன்களை வழங்குவதில்லை. ஏழை, எளிய மக்களை பாதிக்கும் பஸ் கட்டண உயர்வை திரும்ப பெறும் வரை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் அப்துல்கனிராஜா, சொக்கலிங்கம், சிவசக்திவேல், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் செல்வராகவன், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சந்தானம், திராவிடர் கழக மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் ஜான்சன், சமத்துவ மக்கள் கழக மாவட்ட தலைவர் திரவியம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.