பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி விருதுநகரில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
அரசு பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி விருதுநகரில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
விருதுநகர்,
தமிழகம் முழுவதும் தி.மு.க. தலைமையில் பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி அனைத்து மாவட்ட தலைநகர்களிலும் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய தேசிய லீக், விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, ஆதிதமிழர் பேரவை உள்ளிட்ட கட்சிகளும் கலந்துகொள்வதாக தெரிவித்து இருந்தன.
இந்தநிலையில் நேற்று தி.மு.க. சார்பில் மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகரில் தேசபந்து திடலில் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளார் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தலைமையிலும், வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தங்கம்தென்னரசு முன்னிலையிலும் பஸ் கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ராஜபாளையம் தி.மு.க. எம்.எல்.ஏ. தங்கபாண்டியன், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ராமசாமி, முன்னாள் எம்.பி. லிங்கம், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம், முன்னாள் எம்.பி. சிப்பிப்பாறை ரவிச்சந்திரன், விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஸ்ரீராஜா சொக்கர், மேற்கு மாவட்ட தலைவர் தளவாய்பாண்டியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் இப்ராகிம்ஷா, தேசிய லீக் மாவட்ட செயலாளர் ஜகாங்கீர், ஆதிதமிழர் பேரவை மாவட்ட செயலாளர் பூவை ஈஸ்வரன், விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பஸ் கட்டண உயர்வை தமிழக அரசு ரத்து செய்யாதபட்சத்தில் நாளை(திங்கட்கிழமை) முதல் தி.மு.க. சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து விருதுநகர்-அருப்புக்கோட்டை ரோட்டில் உள்ள வி.வி.எஸ். திருமண அரங்கில் தி.மு.க. செயல் வீரர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. ஆகியோர் சிறை நிரப்பும் போராட்டத்தில் தி.மு.க. தொண்டர்கள் கலந்துகொள்ள வேண்டிய அவசியம் குறித்து பேசினர்.