கமலா மில் தீ விபத்து: கேளிக்கை விடுதி உரிமையாளர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி

மும்பை லோயர்பரேல் கமலா மில் வளாகத்தில் உள்ள 4 மாடி கட்டிடத்தின் மொட்டை மாடியில் செயல்பட்டு வந்த ‘ஒன் அபோவ்’ மற்றும் ‘மோஜோ பிரிஸ்டோ’ ஆகிய 2 கேளிக்கை விடுதிகளில் கடந்த மாதம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

Update: 2018-01-27 23:15 GMT

மும்பை,

மும்பை லோயர்பரேல் கமலா மில் வளாகத்தில் உள்ள 4 மாடி கட்டிடத்தின் மொட்டை மாடியில் செயல்பட்டு வந்த ‘ஒன் அபோவ்’ மற்றும் ‘மோஜோ பிரிஸ்டோ’ ஆகிய 2 கேளிக்கை விடுதிகளில் கடந்த மாதம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், அங்கு பிறந்தநாள் கொண்டாடிய இளம்பெண் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்.

இந்த தீ விபத்து தொடர்பாக ‘ஒன் அபோவ்’ கேளிக்கை விடுதியின் உரிமையாளர்கள் ஹிருபேஷ் சங்க்வி, ஜிகர் சங்க்வி, அபிஜித் மான்கர் மற்றும் ‘மோஜோ பிரிஸ்டோ’ கேளிக்கை விடுதி உரிமையாளர்கள் யுக் பதக், யுக் துல்லி ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இந்தநிலையில் கைதான 5 பேரும் தங்களுக்கு ஜாமீன் கேட்டு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்களது ஜாமீன் மனு மீதான விசாரணை மாஜிஸ்திரேட்டு வி.பி.போரா முன்னிலையில் நடந்தது. அப்போது கேளிக்கை விடுதி உரிமையாளர்கள் 5 பேரின் ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து அவர் உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்