குடியரசு தினத்தில் விடுமுறை அளிக்காத 43 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
சிவகங்கை மாவட்டத்தில் குடியரசு தினத்தில் விடுமுறை அளிக்காத 43 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முன்தினம் குடியரசு தினத்தன்று முன் அனுமதியின்றி தொழிலாளர்களை பணியில் அமர்த்தப்பட்டது தொடர்பாக சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையாளர்(அமலாக்கம்) மைவிழிசெல்வி தலைமையில், சிவகங்கை தொழிலாளர் துணை ஆய்வாளர் மலர்விழி, தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் சேதுராஜ், சந்திரசேகரன், சேதுபதி ஆகியோர் சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர் பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது, முன்னறிவிப்பு இன்றி குடியரசு தினத்தில் விடுமுறை அளிக்காமல் பணியாளர்களை வேலை செய்ய அனுமதித்த 18 கடைகள், 22 உணவு நிறுவனங்கள் மற்றும் 3 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என 43 நிறுவனங்கள் மீது தேசிய பண்டிகை விடுமுறை சட்டம், உணவு நிறுவன சட்டம் மற்றும் மோட்டார் போக்குவரத்து சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.