தி.மு.க. ஆர்ப்பாட்டத்திற்கு சென்ற மாட்டு வண்டி தாறுமாறாக ஓடி தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது
கரூரில் தி.மு.க. ஆர்ப்பாட்டத்திற்கு சென்ற மாட்டு வண்டி தாறுமாறாக ஓடி தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் பெண்கள் உள்பட 9 பேர் படுகாயமடைந்தனர்.
கரூர்,
பஸ் கட்டண உயர்வை கண்டித்து கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் கரூர் பஸ் நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக தாந்தோன்றிமலை பகுதியில் தி.மு.க.வினர் மாட்டு வண்டியில் பயணம் செய்ய ஏற்பாடு செய்திருந்தனர்.
அதன்படி தாந்தோன்றிமலை கல்யாண வெங்கட ரமண சாமி கோவில் அருகே சாலையில் 4 மாட்டு வண்டிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதில் தி.மு.க. நிர்வாகிகள் சிலர் ஏறி அமர்ந்தனர். சிலர் மாட்டு வண்டி அருகே நின்று கொண்டிருந்தனர். பொதுமக்களும் மாட்டு வண்டிகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
கரூர் பஸ் நிலையம் புறப்படுவதற்காக ஒரு மாட்டு வண்டியை முன்னால் நகர்த்த முயன்றனர். அப்போது வண்டியில் கட்டப்பட்டிருந்த 2 மாடுகளும் திமிறிக்கொண்டு ஓடத் தொடங்கின. வண்டியில் கயிற்றை பிடித்திருந்தவரால் மாடுகளை நிறுத்த முடியவில்லை. இதனால் மாட்டு வண்டி தாறுமாறாக ஓடியது. அப்போது எதிரே வந்த 2 மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. பின்னர் சாலையின் நடுவில் இருந்த தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது.
இதில் மாட்டு வண்டியில் இருந்த பெண் தொண்டர்கள் மற்றும் முதியவர் ஒருவர் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். இதில் முதியவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் பொதுமக்களும், தி.மு.க.வினரும் அதிர்ச்சியடைந்தனர். படுகாயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சமபவத்தில் தாந்தோன்றிமலையை சேர்ந்த சுலோச்சனா (வயது50), ஜோதி (50), பொன்னுத்தாய் (55), ஆசைதம்பி (60), ராஜூ (45) உள்பட 9 பேர் படுகாயமடைந்தனர். இதில் பெண்கள் உள்பட 6 பேர் தி.மு.க. பிரமுகர்கள் ஆவார்கள். காயமடைந்தவர்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பசுபதிபாளையம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். கவிழ்ந்த மாட்டு வண்டியை பொதுமக்கள் தூக்கி நிறுத்தினர். மேலும் 2 மாடுகளையும் அவிழ்த்து மாட்டுக்காரர் அங்கிருந்து அழைத்துக்கொண்டு சென்றார்.
மாட்டு வண்டி தறிகெட்டு ஓடிய சம்பவம் நேற்று அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பிறகு மற்ற மாட்டு வண்டிகளை ஓரமாக நிறுத்தினர். அதில் பயணம் செய்வதை விட்டு மோட்டார் சைக்கிளில் ஆர்ப்பாட்டத்துக்கு சென்றனர். பஸ் கட்டண உயர்வால் மாட்டு வண்டியில் பயணம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாக எடுத்துரைக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க முயன்றவர்களுக்கு இந்த துயர சம்பவம் நேரிட்டது. இந்த சம்பவம் குறித்து பசுபதிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக தி.மு.க.வினர் பலர் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர். தாறுமாறாக ஓடிய வண்டியில் கட்டப்பட்டிருந்த 2 மாடுகளும் நல்ல உயரமாக, திடமாக இருந்தன. அதன் கயிறுகளை மாட்டு வண்டிக்காரர் பிடித்து வைக்காமல், தி.மு.க.வினர் பிடித்திருந்தனர். வண்டியை முன்னால் எடுப்பதற்காக கயிற்றை இயக்கிய போது 2 மாடுகளும் நிற்காமல் ஓடத்தொடங்கின.மாட்டு வண்டிக்காரர் மாடுகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது. தாறுமாறாக ஓடிய போது மாட்டு வண்டியில் இருந்து ஒருவர் குதித்து காயமின்றி தப்பினார்.