பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க.-கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பஸ் கட்டண உயர்வை கண்டித்து நாகையில் தி.மு.க. -கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
நாகப்பட்டினம்,
நாகை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அவுரித்திடலில் தி.மு.க. -கூட்டணி கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. மாவட்ட பொறுப்பாளர் கவுதமன் தலைமை தாங்கினார். தி.மு.க. விவசாய தொழிலாளர் அணி செயலாளர் மதிவாணன், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் கனகராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட பொருளாளர் கதிர்நிலவன், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் இப்ராகிம், முஸ்லிம் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் ஜபருல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பஸ் கட்டண உயர்வை கண்டித்தும், அதனை உடனே தமிழக அரசு திரும்ப பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் தி.மு.க. நாகை நகர செயலாளர்கள் போலீஸ் பன்னீர், செந்தில், மாவட்ட துணை செயலாளர்கள் மனோகரன், இளஞ்செழியன், காங்கிரஸ் கட்சி பொதுக்குழு உறுப்பினர் ராமலிங்கம், கீழையூர் ஒன்றிய செயலாளர் சுப்பிரணியன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் மோகன், ஒன்றிய செயலாளர் அய்யாப்பிள்ளை, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணை செயலாளர் பேரறிவாளன் உள்பட தி.மு.க. கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.