ஆற்றில் பிணமாக மிதந்த இளம்பெண்-2 மகன்கள் கொல்லப்பட்டனர் பிரேத பரிசோதனையில் தகவல்
நித்திரவிளை அருகே ஆற்றில் பிணமாக மிதந்த இளம்பெண்ணும், 2 மகன்களும் கொல்லப்பட்டதாக பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.;
நித்திரவிளை,
நித்திரவிளை அருகே வள்ளவிளை, ததேயுபுரத்தை சேர்ந்தவர் விஜயதாசன், மீன்பிடி தொழிலாளி. இவருடைய மனைவி பேபி ஷாலினி என்கிற சங்கீதா (வயது 27). இவர்களுக்கு சஞ்சய் மிசியோ (7), பியு போபர்(5) என்ற இரண்டு மகன்கள் இருந்தனர்.
குடும்ப தகராறு காரணமாக விஜயதாசனும் அவரது மனைவி பேபி ஷாலினியும் கடந்த 2½ ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். ஒரு மாதத்துக்கு முன்புதான் கணவன்-மனைவி இருவரும் மீண்டும் சேர்ந்து வாழத் தொடங்கினர். அவர்கள் நித்திரவிளை தெருமுக்கு பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
சில நாட்களுக்கு முன்பு விஜயதாசன் ஆழ்கடல் மீன்பிடிப்பு பணிக்கு சென்றார். இதனால் வீட்டில் பேபி ஷாலினியும், 2 மகன்கள் மட்டும் இருந்தனர். இவர்களின் துணைக்காக பேபி ஷாலினியின் தந்தை மார்ட்டின் உடன் தங்கி இருந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு பேபி ஷாலினியும், இரண்டு மகன்களும் மாயமானார்கள்.
இந்தநிலையில், நேற்று முன்தினம் பேபி ஷாலினியும் இரண்டு மகன்களும் நித்திரவிளை அருகே மங்காடு பகுதி தாமிரபரணி ஆற்றில் பிணமாக கிடந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது தெரியாமல் இருந்தது.
இதுகுறித்து நித்திரவிளை போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றினர். அப்போது, பேபி ஷாலினியின் முகம் பாலித்தீன் பையால் இறுக்கமாக சுற்றப்பட்டிருந்தது. இதனால், அவர்களின் சாவில் சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து இறந்தவர்களின் உடல்கள் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அத்துடன் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற விஜயதாசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த விஜயதாசன் கரை திரும்பினார்.
இந்தநிலையில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நடந்த பிரேத பரிசோதனை முடிவு பற்றிய பரபரப்பு தகவல் நேற்று வெளியானது. இதில் பேபி ஷாலினி கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. மேலும், இரண்டு மகன்களும் தண்ணீர் மூழ்கி இறந்துள்ளனர். எனவே பேபி ஷாலினியை கொலை செய்த கொலையாளிகள், அவருடைய இரண்டு மகன்களையும் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.
இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். பேபி ஷாலினியின் செல்போனை சோதனை செய்த போது, அந்த பகுதியில் மருத்துவமனை நடத்தி வரும் டாக்டர் ஒருவரும், ஒரு வாலிபரும் அடிக்கடி பேசி இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த டாக்டரையும், அந்த வாலிபரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும், கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்ததால், அவரது கணவர் மீதும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே, விஜயதாசனை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.