வர்த்தக துறைமுகத்தை எதிர்த்து உண்ணாவிரதம் திரைப்பட இயக்குனர் கவுதமன் பங்கேற்பு
கன்னியாகுமரியில் வர்த்தக துறைமுகத்தை எதிர்த்து உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் திரைப்பட இயக்குனர் கவுதமன் கலந்து கொண்டார்.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி அருகே கோவளத்துக்கும் கீழமணக்குடிக்கும் இடைப்பட்ட பகுதியில் வர்த்தக துறைமுகம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த பகுதியில் துறைமுகம் அமைந்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதுதொடர்பாக பல கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
மேலும், போராட்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு அவர்கள், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதன்படி, கன்னியாகுமரி புனித அந்தோணியார் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடந்தது. திரைப்பட இயக்குனர் கவுதமன் கலந்து கொண்டு பேசினார். மேலும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரி தேவசகாயம், இயற்கை விஞ்ஞானி லால்மோகன், போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் பிரபா பெர்னான்டோ உள்பட பலர் பேசினர்.
போராட்டத்தில், துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.எஸ். பார்த்த சாரதி, மதசார்பற்ற ஜனதா தள அகஸ்தீஸ்வரம் வட்டார தலைவர் தியாகராஜன், குளச்சல் நகரசபை முன்னாள் தலைவர் ஜேசையா, குமரி ஸ்டீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் கன்னியாகுமரி, கோவளம், புதுக்கிராமம், கீழ மணக்குடி, மேல மணக்குடி, முகிலன்குடியிருப்பு, இலந்தையடி விளை, சின்னமுட்டம், வாவதுறை, ஆரோக்கியபுரம், சிலுவைநகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும், ஆலய பங்குதந்தையர்கள், அருட்பணியாளர்கள், பங்குபேரவை நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.
மேலும், கன்னியாகுமரி பகுதியில் மீனவர்கள் யாரும் நேற்று மீன்பிடிக்க செல்ல வில்லை. அவர்கள் கடலுக்கு செல்லாமல் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
போராட்டத்தையொட்டி கன்னியாகுமரி போலீஸ் உதவி சூப்பிரண்டு வேணுகோபால் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.