தூத்துக்குடி ஸ்பிக்நகரில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி ஸ்பிக்நகரில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஸ்பிக்நகர்,
தூத்துக்குடி ஸ்பிக்நகரில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் பஸ் கட்டண உயர்வை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் நேற்று காலையில் ஸ்பிக்நகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மனிதநேய மக்கள் கட்சி நிறுவனர் ஜவாஹிருல்லா கண்டன உரையாற்றினார். மாநில தி.மு.க. மாணவர் அணி துணை செயலாளர் உமரி சங்கர், முன்னாள் எம்.பி. ஜெயத்துரை, காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் தமிழினியன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கூறியதாவது;–
மத்திய அரசு பணமதிப்பு இழப்பு நடவடிக்கையில் எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் ஈடுபட்டது. அதை முன் உதாரணமாக கொண்டு தமிழக அரசும் பஸ் கட்டண உயர்வை எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் கொண்டு வந்து உள்ளது. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழக அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது. விரைவில் தி.மு.க ஆட்சி மலரும் என்றார்.
மனிதநேய மக்கள் கட்சியின் நிறுவனர் ஜவாஹிருல்லா பேசும் போது, தமிழக அரசு பஸ் கட்டண உயர்வுக்கு தொழிலாளர்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பளம் ஒரு காரணம் என்று கூறுகிறது. அரசு பள்ளி, கல்லூரிகளில் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் போது, அங்கு படிக்கும் மாணவர்களிடம் இருந்து எந்தவித கூடுதல் கட்டணமும் பெறப்படுவது இல்லை.
ஆனால் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கும் போது அதனை கட்டண உயர்வு என்று கூறி மக்கள் தலையில் கட்டுவது நியாயமா?. போக்குவரத்து துறை மக்களுக்கு சேவை வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்டது. கட்டண உயர்வு என்ற பெயரில் பொதுமக்களை தண்டிக்க கூடாது. எனவே கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றார்.
நிர்வாகிகள்
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. சுடலையாண்டி, மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ஆறுமுகபெருமாள், பகுதி செயலாளர் கருணாகரன், முன்னாள் இளைஞர் அணி துணை செயலாளர் ஜெகன், தென்திருப்பேரை நகர செயலாளர் ராமஜெயம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சொர்ணகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருச்செந்தூர் தி.மு.க. நிர்வாகி மந்திர மூர்த்தி நன்றி கூறினார்.