குட்டி தோனி..!
சென்னை அண்ணாநகரை சேர்ந்த ‘சனுஷ் சூர்யா தேவ்’விற்கு இரண்டரை வயதுதான் ஆகிறது. ஆனால் அதற்குள் இளம் கிரிக்கெட் நட்சத்திரமாக மாறிவிட்டான்.
யார், எந்த பந்து வீசினாலும் சரி... அதை சூப்பராக அடித்து ஆடுகிறான், இந்த குட்டி கிரிக்கெட் வீரன். இவனது பயிற்சிகளும், கிரிக்கெட் ஆட்டங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது தனிகதை என்றாலும், அதை பார்த்து ரசித்த தோனி சென்னை வந்து சனுஷை பாராட்டியதுதான் இன்றைய ‘ஹாட் டாக்’. தோனியின் சந்திப்பினால் சந்தோஷ மழையில் நனைந்துக்கொண்டிருந்த சனுஷையும், அவனது தந்தை முருகன் ராஜையும் சந்தித்தோம். அவர் சனுஷின் கிரிக்கெட் ஆர்வம் முதல் தோனியின் சந்திப்பு வரையிலான அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார்.
“நான் இயல்பாகவே கிரிக்கெட்டர். இந்திய அணியில் விளையாட வேண்டும் என்ற ஆசை பல காரணங்களால் நிறைவேறாமல் போனது. இருப்பினும் இன்று கிரிக்கெட் பயிற்சியாளராக இருக்கிறேன். என் மனைவி சுபத்ரா, டாக்டர். மகன் சனுஷ், மகேந்திர சிங் தோனி பிறந்த தேதியில் பிறந்தவன். அதனால் தோனியை பிரதிபலிக்கும் வகையில் பெயர் வைக்க ஆசைப்பட்டோம். அதிலும் ‘மகேந்திர சிங் தோனி’ என்பதன் சுருக்கமான ‘எம்.எஸ்.டி.’ பெயர் பொருத்தமாக இருந்தது. ஏனெனில் எனது பெயரான முருகன் என்பதில் ‘எம்’ இருந்ததால், மீதமிருக்கும் ‘எஸ்’ மற்றும் ‘டி’ ஆகிய எழுத்துகளில் இருக்கும்படியான பெயரை தேடினோம். அப்படி தான் ‘சனுஷ் சூர்யா தேவ்’ என்ற பெயர் கிடைத்தது. அதில் இனிஷியலான ‘எம்’ எழுத்தை சேர்த்து தோனியின் செல்லபெயரான ‘எம்.எஸ்.டி.’ என்று அழைக்கிறோம்” என்று ஜூனியர் எம்.எஸ்.டி.யாக வலம் வரும் சனுஷின் முன்கதை சொன்னவர், அவன் கிரிக்கெட் மட்டையை கையில் எடுத்த கதையை விவரிக்கிறார்.
“ஐந்தாவது மாதத்தில் இருந்து கிரிக்கெட் பந்துதான் அவனது விளையாட்டு. ஆறாவது மாதத்தில் என்னுடைய முதல் பரிசாக கிரிக்கெட் மட்டை வாங்கி கொடுத்தேன். அடுத்தடுத்து கிடைத்த பரிசைவிட கிரிக்கெட் மட்டைதான் அவனுக்கு மிகவும் பிடித்தது. நீளமான லாரி பொம்மையை பரிசளித்தால், அதை கிரிக்கெட் மட்டையாக மாற்றி, விளையாடுவான். வட்டமான விளையாட்டு பொருட்கள் அவனது கைகளில் பந்தாக மாறிவிடும். தூக்கி எறிந்து விளையாடுவான். இப்படியே சனுஷோடு, கிரிக்கெட் ஆசைகளும் வளர தொடங்கியது. அவனுக்கு ஒரு வயதானபோது அருகில் இருந்த பூங்காவிற்கு அழைத்து சென்றிருந்தேன். அங்கு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தவர்களுடன் ஐக்கியமானதோடு, எழுந்து நிற்க தடுமாறும் வயதிலேயே கிரிக்கெட் மட்டையை தூக்க ஆசைப்பட்டான். அவன் அமர்ந்தபடியே பந்துவீசுவதையும், கிரிக்கெட் மட்டையை கையில் எடுத்து விளையாடுவதையும், அங்கிருந்தவர்கள் வீடியோ எடுத்திருந்தனர். அதை பார்த்தபிறகுதான் சனுஷிற்கு முறையான கிரிக்கெட் பயிற்சி கொடுக்க ஆரம்பித்தேன்” என்பவர், பால் மணம் மாறாத குழந்தைக்கு கிரிக்கெட் பயிற்சி அளித்த விதத்தை விளக்கினார்.
“முதல் பிறந்த நாளுக்குப் பிறகு அவனாகவே கிரிக்கெட் மட்டையை எடுத்து விளையாட தொடங்கினான். எடுத்ததும் விளையாடச் சொல்லித் தராமல், கிரிக்கெட் தொடர்பான வீடியோக்களைத் தொடர்ந்து போட்டுக் காண்பித்து, அவன் மனதில் கிரிக்கெட்டை பதியவைத்தோம். அதற்கு பிறகு சின்னச் சின்ன உடற்பயிற்சிகளை சொல்லி கொடுத்து, அதன் பிறகே கிரிக்கெட் விளையாட பழக்கப்படுத்தினேன். அந்த பழக்கத்தை இப்போது வரைக்கும் பின்பற்றுகிறான். ஆரம்பத்தில் பிளாஸ்டிக் பந்து, ரப்பர் பந்து என விளையாடத் தொடங்கி, இப்போது கிரிக்கெட் விளையாடும் ‘கார்க்’ பந்தில் விளையாடுகிறான்.
காலையில் 5 மணிக்கு, அவனது கிரிக்கெட் பயிற்சிகள் ஆரம்பித்துவிடும். பேட்டிங் மட்டுமின்றி, பவுலிங்கிலும் அசத்துகிறான்” என்று மகிழ்ச்சி பொங்க பேசுபவர், அவனுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கிரிக்கெட் மட்டையை பற்றியும் பகிர்ந்து கொண்டார்.
“5 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி கொடுப்பது சுலபமானது. ஆனால் 2 வயது குழந்தைக்கு கிரிக்கெட் பயிற்சி அளிப்பது என்பது சவாலானது. சனுஷ் பயன்படுத்துவதற்கு வசதியான பிரத்யேக கிரிக்கெட் மட்டையை உருவாக்கினோம். சிறுவர்களுக்கான மட்டையை வாங்கி, அதை சனுஷின் உயரத்திற்கு ஏற்ப, செதுக்கி 150 கிராமிற்கும் குறைவான எடையில் மட்டையை தயாரித்தோம். அத்துடன் அவன் விளையாடுவதற்கு வசதியாக பிரத்யேக தடுப்புகளை உருவாக்கினோம். ஹெல்மெட், தொடை தடுப்பு, கால் தடுப்பு, கை உறை... என கிரிக்கெட் உபகரணங்களை வாங்கி, அவனுக்காக மாற்றியமைத்தோம்.
மைதானத்தில் சனுஷின் அசாத்திய திறமையைப் பார்ப்பவர்கள் ஆச்சரியப்படுவதோடு, அவனது ரசிகனாகவும் மாறிவிடுகிறார்கள். சிலர் வீடியோ எடுத்து பேஸ்புக்கில் பகிர்ந்துகொள்ள... சனுஷ், இளம் கிரிக்கெட் நட்சத்திரமாக மாறிவிட்டான். இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் பாராட்டுகள் குவிகின்றன. அதிலும் இந்தியாவின் ‘கூல் கேப்டனான’ தோனியின் சந்திப்பு எங்களை மகிழ்ச்சியில் மூழ்கடித்துவிட்டது” என்பவர், தோனியின் சந்திப்பு பற்றி பகிர்ந்து கொள்கிறார்.
“சனுஷின் கிரிக்கெட் பயிற்சிகளையும், பந்துகளை எதிர்கொள்ளும் முறையையும் வெகுவாக ரசித்த தோனி, ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி களை கண்டுகளிக்க சென்னை வந்திருந்தபோது சனுஷையும் சந்தித்தார். அவனிடம் 10 நிமிடங்கள் பேசிய தோனி, அவனது மற்ற வீடியோக்களையும் வெகுவாக ரசித்தார். அதில் சில ஷாட்டுகள், தோனியின் பாணியிலேயே விளையாடியிருந்ததால் அவருக்கு சந்தோஷம் அதிகமானது. ‘இவ்வளவு பிரமாதமாக விளையாடும் இவனுக்கு இரண்டு வயது தான் ஆகிறதா?’ என்று ஆச்சரியப்பட்டார். அவரால் நம்பவே முடியவில்லை. மேலும் வருங்காலத்தில் சிறந்த கிரிக்கெட் வீரராக வருவான் என்று வாழ்த்திவிட்டு சென்றார். அந்த சந்திப்பின் முடிவில் சனுஷ் தோனிக்கு அன்பு முத்தமும் கொடுத்து மகிழ்ந்தான்” என்று ஆனந்தப்படும் முருகன், ‘இளம் கிரிக்கெட்டர்’ என்ற அந்தஸ்தோடு ‘இந்தியன் புக் ஆப் ரெக்கார்டு’ சாதனை புத்தகத்தில் மகன் இடம்பிடித்திருப்பதையும் பகிர்ந்து கொண்டார்.
“எனக்கும், என்னுடைய கணவருக்கும் ஒரே ஆசைதான். சனுஷின் பெயர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடிக்கவேண்டும். அதோடு இந்திய அணியிலும் தேர்வு பெற வேண்டும். அதற்காக நாங்கள் எதையும் இழக்க தயாராக இருக்கிறோம். கிரிக்கெட் பயிற்சி சனுஷின் ஆரோக்கியத்திற்கு எந்தவிதத்திலும் தடையாக இருக்கக்கூடாது என்பதற்காகவே என்னுடைய மருத்துவ பணிகளை ஒதுக்கிவைத்துவிட்டேன். சனுஷை கவனிப்பதுதான் என்னுடைய முழுநேர வேலை. சமகால பெற்றோர்களைப்போல் மணலில் விளையாடவிடாமல், வீட்டுக்குள்ளேயே அடைத்துவைக்க மனம் வரவில்லை. அவன் எங்கு விளையாடினாலும் அவனுடன் சேர்ந்து நாங்களும் விளையாடுவோம். அதே நேரத்தில், இப்போதே தமிழ், ஆங்கிலம், கணக்கு பாடங்களை கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்லிக்கொடுக்கிறோம்” என்று தொலைநோக்குப் பார்வையுடன் பேசுகிறார், ஜூனியர் எம்.எஸ்.டி.யின் அம்மா சுபத்ரா.