நத்தம், கொடைக்கானலில் கிராமசபை கூட்டத்தில் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம்
நத்தம், கொடைக்கானலில் நடந்த கிராம சபை கூட்டத்தில் அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
நத்தம்,
குடியரசு தினத்தையொட்டி, மாவட்டத்தில் உள்ள 306 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது. அதன்படி நத்தம் அருகே சாத்தாம்பாடி ஊராட்சியை சேர்ந்த விளாம்பட்டி கிராமத்தில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. ஆனால் கூட்டம் தொடர்பாக, கிராம மக்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், திடீரென அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் முனியாண்டி, கூடுதல் ஆணையாளர் குருவானந்தம் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்தனர்.
பின்னர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இனிவருங்காலத்தில் கிராம சபை கூட்டம் குறித்து பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
இதேபோல் கொடைக்கானல் தாலுகா மன்னவனூர் ஊராட்சியில் கிராமசபை கூட்டம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வம் தலைமையிலும், ஊராட்சி செயலாளர் வீரமணி முன்னிலையிலும் நடந்தது. அப்போது அங்கு வந்த 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தங்களது பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும். எழும்பள்ளம் ஏரியினை ஊராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கொடைக்கானல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்ராஜா தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர்.
பின்னர் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். அதன்பின்னர் தொடர்ந்து கிராம சபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் எழும்பள்ளம் குளத்தினை சீரமைத்து தடுப்பு அணை கட்டுவது என்றும், 20 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட குடிநீர் குழாய்களை சீரமைத்து குடிநீர் வழங்குவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.
வத்தலக்குண்டு அருகே விராலிப்பட்டியில் நடந்த கூட்டத்துக்கு ஊர் முக்கியஸ்தர் பாண்டி தலைமை தாங்கினார். ஊராட்சி செயலாளர் முத்துக்குமார் தீர்மானங்களை மக்களிடம் எடுத்து கூறினார் அப்போது விராலிப்பட்டி இளைஞர்கள் சிலர், கிராமசபை கூட்டம் பற்றி முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதேபோல் ஜி. தும்மலப்பட்டி, சந்தையூர், கணவாய்ப்பட்டி, பழையவத்தலக்குண்டு, ரெங்கப்பநாயக்கன்பட்டி, குன்னுவாரன்கோட்டை ஆகிய இடங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.