போலீஸ்காரர்களை தாக்கி துப்பாக்கி பறிப்பு: இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் பணி இடைநீக்கம்
பெங்களூருவில் போலீஸ்காரர்களை தாக்கி துப்பாக்கி பறிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேரை பணி இடைநீக்கம் செய்து போலீஸ் கமிஷனர் சுனில்குமார் உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு,
பெங்களூரு கொடிகேஹள்ளி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர்களாக பணியாற்றி வருபவர்கள் பரமேஸ் மற்றும் சித்தப்பா. இவர்கள் 2 பேரும் கடந்த 17-ந் தேதி நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார்கள். அப்போது டாடாநகர் பகுதியில் மர்மநபர்கள் சிலர் குடிபோதையில் பொதுமக்களுடன் தகராறு செய்வது பற்றி தகவல் கிடைத்ததும், அங்கு பரமேஸ், சித்தப்பா விரைந்து சென்றார்கள். அப்போது குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறு செய்து கொண்டிருந்த மர்மநபர்களை கலைந்து செல்லும்படி போலீஸ் காரர்கள் கூறினார்கள். ஆனால் அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததுடன் போலீஸ்காரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் திடீரென்று மர்மநபர்கள் தங்களிடம் இருந்த இரும்பு கம்பி, ஆயுதங்களால் போலீஸ்காரர்கள் பரமேஸ், சித்தப்பாவை கண்மூடித்தனமாக தாக்கினார்கள். மேலும் அவர்களிடம் இருந்த ஒரு துப்பாக்கியை பறித்து கொண்டு மர்மநபர்கள் தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து கொடிகேஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மர்மநபர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில், போலீஸ் காரர்களை மர்மநபர்கள் தாக்கியபோது, அவர்களை துப்பாக்கியால் சுட்டு பிடிக்காதது ஏன்?, துப்பாக்கியை பறித்து செல்லும் வரை என்ன செய்தார்கள்? என்பது குறித்து விளக்கும் அளிக்கும்படி போலீஸ் கமிஷனர் சுனில்குமாருக்கு, மாநில போலீஸ் டி.ஜி.பி. நீலமணி ராஜு உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வடகிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் கிரீசுக்கு, போலீஸ் கமிஷனர் சுனில்குமார் உத்தரவு பிறப்பித்தார்.
அதன்பேரில், அவர் விசாரணை நடத்தினார். அப்போது குண்டுகளை துப்பாக்கிக்குள் போடாமல், போலீஸ்காரர்கள் தங்களது சட்டை பைக்குள் வைத்திருந்ததும், இதனால் அவர்களால் மர்மநபர்களை சுட முடியாமல் போனதும் தெரியவந்தது. அதே நேரத்தில் மர்மநபர்கள் பொதுமக்களுடன் தகராறு செய்வது பற்றி அறிந்திருந்தும் உதவி சப்-இன்ஸ்பெக்டரான முனிரெட்டி, சம்பவ இடத்திற்கு தாமதமாக சென்றிருந்தார்.
இதுபோல, போலீஸ்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, துப்பாக்கி பறித்து செல்லப்பட்டது பற்றி கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜண்ணா தகவல் தெரிவிக்காமலும், மர்மநபர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்ததும் தெரியவந்தது. இதுதொடர்பான விசாரணை அறிக்கையை துணை போலீஸ் கமிஷனர் கிரீஷ், போலீஸ் கமிஷனர் சுனில்குமாரிடம் தாக்கல் செய்தார்.
இதையடுத்து, மர்மநபர்கள் போலீஸ்காரர்களை தாக்கிவிட்டு துப்பாக்கியை பறித்து சென்ற சம்பவத்தில் பணியில் அலட்சியமாக இருந்ததாக கூறி, கொடிகேஹள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜண்ணா, உதவி சப்-இன்ஸ்பெக்டர் முனிரெட்டி, போலீஸ்காரர்கள் பரமேஸ், சித்தப்பாவை பணி இடைநீக்கம் செய்து போலீஸ் கமிஷனர் சுனில்குமார் உத்தரவிட்டுள்ளார்.