பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. நடத்தும் போராட்டத்தில் ம.தி.மு.க. பங்கேற்கும், வைகோ பேட்டி
பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. நடத்தும் போராட்டங்களில் ம.தி.மு.க. பங்கேற்கும் என்று, வைகோ தெரிவித்தார்.
மதுரை,
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மதுரையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்திய அரசு தமிழக மீனவர்களை தன் குடிமக்களாக நினைக்கவில்லை. சிங்கள அரசுக்கு உதவி செய்து கொண்டு தமிழர்களுக்கு துரோகம் இழைக்கிறது. இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள மசோதா சட்டமானால் சர்வதேச கடல் பகுதியில் தமிழக மீனவர்களின் படகுகள் செல்ல முடியாது. ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.7 கோடியே 20 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். எனவே இந்த சட்டத்தை அனுமதிக்கக் கூடாது. இலங்கைக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுத்தால் அந்த சட்டத்தை கொண்டு வர முடியாது. மத்திய அரசுக்கு தமிழ் மக்கள் மீது அக்கறை இல்லை. தமிழினம், தமிழ் மக்களுக்கு எதிராக மத்திய அரசு உள்ளது. இந்திராகாந்திக்கு இருந்த தொலைநோக்கு அணுகுமுறை தற்போதைய மத்திய அரசுக்கு இல்லை. சிங்கள அரசுக்கு உதவி செய்து கொண்டு தமிழர்களின் மீன்பிடி தொழிலை அழிக்க நினைக்கிறது.
இந்தியா முழுவதும் இந்தியை கட்டாயமாக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. இது கண்டிக்கத்தக்கது.
சீட் பெல்ட் அணியாத காரணத்திற்காக நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் என்ற வாலிபரை காவல்துறையினர் தாக்கினர். இதனால் மனவேதனை அடைந்த அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது உயிரிழப்புக்கு காரணமான காவல்துறையினரை பணியிடை நீக்கம் செய்வதுடன், அவரது குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பல இடங்களில் பஸ் கட்டணம் 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. பேருந்து கட்டண உயர்வை கண்டித்து போராட்டம் நடத்தும் மாணவர்கள் யாரும் அரசியல் தூண்டுதலால் போராடவில்லை. அவர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டதால் போராடுகிறார்கள். எனவே அரசு கவுரவம் பார்க்காமல் பிரச்சினையை தீர்க்க முன்வரவேண்டும். பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. நடத்தும் ஆர்ப்பாட்டத்திலும், சாலை மறியல் போராட்டங்களிலும் ம.தி.மு.க. பங்கேற்கும்.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் போது எழுந்து நிற்காத விஜயேந்திரர் அதற்காக ஒரு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. இது கண்டிக்கத்தக்கது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இருக்கும்போது கவர்னர் தன் பணியை மட்டும் செய்ய வேண்டும். ஆனால் கவர்னர் மாநிலம் முழுவதும் ஆய்வு நடத்தி வருகிறார். இது கவர்னர் ஆட்சியை கொண்டு வருவதற்கான முன்னேற்பாடு.
இவ்வாறு அவர் கூறினார்.