பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பஸ் கட்டண உயர்வை கண்டித்து தஞ்சையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2018-01-26 23:00 GMT
தஞ்சாவூர்,

தமிழகத்தில் பஸ் கட்டணத்தை உயர்த்திய தமிழகஅரசை கண்டித்தும், உடனே பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் நாம்தமிழர் கட்சி சார்பில் தஞ்சை ரெயிலடியில் நேற்றுமாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மத்திய மாவட்ட செயலாளர் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் ராம்குமார், துணை செயலாளர் கரிகாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் துரைமுருகன், மணிசெந்தில், மாநில ஒருங்கிணைப்பாளர் குமாயுன், வீரதமிழர் முன்னணி ஒருங்கிணைப் பாளர் செந்தில்நாதன் சேகுவாரா, கொள்கை பரப்பு செயலாளர் திலீபன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் கலைவேந்தன், காசிஆனந்தன், கீதா, அரவிந்தன், சண்முகம் மற்றும் பலர் கலந்து கொண்டு பல்வேறு கோஷங்கள் எழுப்பினர். 

மேலும் செய்திகள்