சென்னை இன்றும், நாளையும் மின்சார ரெயில் சேவையில் மாற்றம்

சென்னை கடற்கரை- ராயபுரம் வழித்தடத்தில் பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட ரெயில்கள் இன்றும் (சனிக்கிழமை) மற்றும் நாளையும் (ஞாயிற்றுக் கிழமை) மின்சார ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2018-01-26 22:30 GMT
சென்னை,

பராமரிப்பு பணி காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

* கடம்பத்தூரில் இருந்து பிற்பகல் 12.05 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரை வழியாக வேளச்சேரிக்கு செல்லும் மின்சார ரெயில் மூர்மார்க்கெட் ரெயில் நிலையம் வரை செல்லும்.

* வேளச்சேரியில் இருந்து பிற்பகல் 12.10 மணிக்கு புறப்பட்டு, கடற்கரை வழியாக திருத்தணிக்கு செல்லும் மின்சார ரெயில் மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 12.15 மணிக்கு புறப்படும்.

* வேளச்சேரியில் இருந்து மதியம் 2.25 மணிக்கு புறப்பட்டு, கடற்கரை வழியாக அரக்கோணத்திற்கு செல்லும் மின்சார ரெயில் மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்படும்.

* வேளச்சேரியில் இருந்து மதியம் 2.40 மணிக்கு புறப்பட்டு, கடற்கரை வழியாக சூலூர்பேட்டைக்கு செல்லும் மின்சார ரெயில் மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்படும்.

* திருவள்ளூரில் இருந்து மதியம் 1.40 மணிக்கு கடற்கரை வழியாக வேளச்சேரிக்கு செல்லும் மின்சார ரெயில் ஆவடி- வேளச்சேரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* வேளச்சேரியில் இருந்து மதியம் 1.50 மணிக்கு கடற்கரை வழியாக பட்டாபிராமிற்கு செல்லும் மின்சார ரெயில் கடற்கரை-பட்டாபிராம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* வேளச்சேரியில் இருந்து ஆவடிக்கு காலை 11.10 மணிக்கு கடற்கரையில் இருந்து புறப்படும் மின்சார ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

* வேளச்சேரியில் இருந்து சென்னை கடற்கரை வழியாக திருவள்ளூருக்கு மதியம் 1.05 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் மின்சார ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

* ஆவடியில் இருந்து கடற்கரை வழியாக பிற்பகல் 12.10 மணிக்கு வேளச்சேரிக்கு புறப்படும் மின்சார ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப் படுகிறது.

* திருவள்ளூரில் இருந்து மதியம் 2.40 மணிக்கு மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்திற்கு புறப்பட மின்சார ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்