ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஆதரவாக நடிகர் பவன் கல்யாண் பிரசாரம்
ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஆதரவாக ஆந்திர நடிகர் பவன் கல்யாண் பிரசாரம் செய்கிறார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் மாத இறுதியில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகிறது. தேர்தலுக்கு 4 மாதங்கள் இருந்தபோதே அரசியல் கட்சிகள் தங்களின் பிரசாரத்தை தொடங்கிவிட்டன. பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா பரிவர்த்தனா யாத்திரையும் தொடங்கினார். சித்தராமையா சாதனை விளக்க பொதுக்கூட்டத்தை ஒரு மாதம் நடத்தி முடித்துள்ளார். ஜனதா தளம்(எஸ்) தலைவர் குமாரசாமி குமாரபர்வ என்ற பெயரில் பயணத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.
இந்த முறை கர்நாடக சட்டசபை தேர்தல் களம் இதுவரை இல்லாத அளவுக்கு மிக கடுமையான போட்டியை சந்திக்க உள்ளது. பா.ஜனதா சார்பில் பிரதமர் மோடி அனைத்து மாவட்டங்களிலும் பிரசாரம் செய்ய இருக்கிறார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தீவிர பிரசாரம் செய்ய உள்ளார். அத்துடன் அந்த கட்சிகள் பிரபல நடிகர்களையும் பிரசாரத்தில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளன.
இந்த நிலையில் ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் ஆந்திராவை சேர்ந்த பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாணை பிரசாரத்தில் ஈடுபடுத்த அக்கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார். இதுகுறித்து ஏற்கனவே ஒரு முறை பவன் கல்யாணை அவர் நேரில் சந்தித்து பேசி இருக்கிறார்.
அதனால் அக்கட்சியை ஆதரித்து நடிகர் பவன் கல்யாண் கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு மக்கள் பெங்களூரு, கோலார், சிக்பள்ளாப்பூர், பல்லாரி, ராய்ச்சூர் ஆகிய பகுதிகளில் அதிகமாக வசிக்கிறார்கள். அந்த மக்களை கவரும் விதமாக அந்த பகுதிகளில் பவன் கல்யாண் பிரசாரம் செய்வார் என்று கூறப்படுகிறது.