கஞ்சா செடி பயிரிட்டு வளர்த்த விவசாயி கைது

சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் அருகே உள்ள பொம்மனகத்தே கிராமத்தை சேர்ந்தவர் ரவிநாயக். விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலம் அப்பகுதியில் உள்ளது.

Update: 2018-01-25 23:52 GMT

கொள்ளேகால்,

நிலத்தில் அவர் மிளகாய் செடிகளுக்கு இடையே ஊடுபயிராக கஞ்சா பயிரிட்டு வளர்த்து வந்ததாக தெரிகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரும், ராமபுரா போலீசாரும் நேற்று முன்தினம் ரவிநாயக்கின் விவசாய நிலத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அவர் மிளகாய் செடிகளுக்கு இடையே கஞ்சா செடியை பயிரிட்டு வளர்த்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து ரவிநாயக்கை போலீசார் கைது செய்தனர். மேலும் கஞ்சா செடிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கைதான ரவிநாயக் மீது ராமபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்