தாறுமாறாக வாகனங்களை ஓட்டிய டிரைவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை

மதகடிப்பட்டில் வாகனங்களை தாறுமாறாக ஓட்டிய டிரைவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர். வாகன சோதனை புதுச்சேரி – விழுப்புரம் சாலையில் தனியார் பஸ்கள், வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறன. கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரத்தில்;

Update: 2018-01-25 23:10 GMT

திருபுவனை,

மதகடிப்பட்டில் வாகனங்களை தாறுமாறாக ஓட்டிய டிரைவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

புதுச்சேரி – விழுப்புரம் சாலையில் தனியார் பஸ்கள், வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறன. கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரத்தில் இருந்து புதுவை வந்த தனியார் பஸ் திருபுவனை ஏரிக்கரையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 20–க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

இதையடுத்து வாகனங்கள் மிதமான வேகத்தில் செல்ல நடவடிக்கை எடுக்குமாறும், அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க வாகன சோதனை நடத்தவும் போலீஸ் டி.ஜி.பி. சுனில்குமார் கவுதம் உத்தரவிட்டார். அதன்பேரில் மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் மேற்பார்வையில் திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலையரசன், சப்–இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் புதுச்சேரி – விழுப்புரம் சாலையில் மதகடிப்பட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது விழுப்புரம் – புதுச்சேரி மார்க்கமாக சென்ற கார், பஸ் உள்பட வாகனங்களை சோதனை செய்தனர். மேலும் ஓட்டுனர் உரிமம் மற்றும் உரிய ஆவணங்கள் இன்றி மோட்டார் சைக்கிள் ஓட்டிவந்த 20 பேர் மற்றும் பேட்ஜ், சீருடை அணியாமல் பஸ் ஓட்டி வந்த 5 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஆய்வின்போது விபத்து ஏற்படுத்தும் வகையில் தாறுமாறாக, அதிவேகமாக பஸ்களை ஓட்டிய டிரைவர்களை போலீசார் எச்சரித்தனர்.

மேலும் செய்திகள்