புதுவை வந்த மு.க.ஸ்டாலினுடன் நாராயணசாமி சந்திப்பு

கடலூரில் நடந்த மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பிற்பகலில் புதுவை வந்தார். அவரை புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளர்கள் சிவா எம்.எல்.ஏ., எஸ்.பி.சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர். அதைத

Update: 2018-01-25 23:30 GMT

புதுச்சேரி,

கடலூரில் நடந்த மொழிப்போர் தியாகிகளுக்கான வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று பிற்பகலில் புதுவை வந்தார். அவரை புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளர்கள் சிவா எம்.எல்.ஏ., எஸ்.பி.சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.

அதைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் புதுவை தனியார் ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். அவரை புதுவை முதல்–அமைச்சர் நாராயணசாமி மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். மேலும் அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன் ஆகியோர் சந்தித்து பேசினார்கள். மாலையில் ஓட்டலில் இருந்து மு.க.ஸ்டாலின் கடலூருக்கு புறப்பட்டு சென்று அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.


மேலும் செய்திகள்