காஞ்சீபுரம் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் கலெக்டர் தகவல்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் குடியரசு தினத்தையொட்டி இன்று கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

Update: 2018-01-25 22:15 GMT

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

குடியரசு தினத்தையொட்டி காஞ்சீபுரம் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (கிராம ஊராட்சி) தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த கிராம சபை கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம், 2018–2019–ம் நிதியாண்டில் பொதுநிதியில் இருந்து மேற்கொள்ளப்பட உள்ள வளர்ச்சிபணிகளுக்கான திட்ட அறிக்கையை கிராம சபை கூட்டத்தின் முன்வைத்து ஒப்புதல் பெறுதல், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள கோருதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து விவாதிக்க வேண்டும்.

மேலும் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம்–2 குறித்து ஒப்புதல் பெறுதல், ஊராட்சி பகுதிகளில் நடைபெற்றுவரும் பல்வேறு திட்டப்பணிகள் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விவரங்கள் குறித்து விவாதித்தல், திறந்தவெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சியாக அறிவிப்பது குறித்து விவாதித்தல், கழிவறை கட்டி பயன்படுத்தும் பயனாளிகளுக்கு பாராட்டு தெரிவித்தல், திடக்கழிவு மேலாண்மை திட்டம் மற்றும் பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கவேண்டும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்