பஸ் கட்டண உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பஸ் கட்டண உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் தேனி பங்களாமேட்டில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.;

Update: 2018-01-25 22:00 GMT
தேனி,

தமிழக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இதற்கு மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. பஸ் கட்டண உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் தேனி பங்களாமேட்டில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மண்டல பொறுப்பாளர் அன்பழகன் தலைமை தாங்கி பேசினார்.

கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயபால், மேற்கு மாவட்ட செயலாளர் தம்பிஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரியகுளம் தொகுதி செயலாளர் ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, பஸ் கட்டண உயர்வை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், கட்டண உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். 

மேலும் செய்திகள்