கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தினர் சாலை மறியல், 222 பேர் கைது
பஸ் கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி மாவட்டத்தில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
தேனி,
தமிழக அரசு பஸ் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். அங்கன்வாடி, உள்ளாட்சி, டாஸ்மாக், கூட்டுறவு போன்ற துறைகளில் தொகுப்பூதியம், மதிப்பூதியம் என்பதை கைவிட்டு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்தக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
தேனி மாவட்டத்தில் தேனி உள்பட 5 இடங்களில் சாலை மறியல் நடந்தது. தேனியில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் பள்ளிவாசல் தெருவில் இருந்து நேரு சிலை சிக்னல் வரை கண்டன ஊர்வலம் நடந்தது. பின்னர், சிக்னல் அருகில் சாலை மறியல் செய்தனர். இந்த மறியலுக்கு சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், தொ.மு.ச. மாவட்ட கவுன்சில் பொறுப்பாளர் முருகன், ஏ.ஐ.யு.டி.யு.சி. மாவட்ட செயலாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினர்.
ஊர்வலத்தின் போதும், மறியலின் போதும் மாநில அரசை கண்டித்தும், பஸ் கட்டண உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். மறியலில் ஈடுபட்ட 47 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் கம்பத்தில் காந்தி சிலையில் இருந்து போக்குவரத்து சிக்னல் வரை ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை தொடர்ந்து அங்கு சாலை மறியல் செய்தனர். மறியலுக்கு ஏ.ஐ.டி.யு.சி. மாநில துணைத்தலைவர் சுந்தரராஜன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு., தொ.மு.ச. உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட 75 பேரை போலீசார் கைது செய்தனர். அதேபோல், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் தங்கம் தலைமையில், கம்பம் போக்குவரத்து சிக்னலில் சாலை மறியல் நடந்தது. மறியலில் ஈடுபட்ட 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல், போடியில் சாலை மறியல் செய்த 33 பேரும், ஆண்டிப்பட்டியில் சாலை மறியல் செய்த 37 பேரும் கைது செய்யப்பட்டனர். மாவட்டம் முழுவதும் மொத்தம் 222 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.