சர்க்கரை ஆலையை நவீனப்படுத்தும் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்
எறையூர் சர்க்கரை ஆலையை நவீனப் படுத்தும் பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பிரதான கூட்டரங்கில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி விவசாய சங்க பிரதிநிதிகளிடம் விவசாயம் தொடர்பான கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜாசிதம்பரம் பேசுகையில், பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை சுட்டுப்பிடிக்க பெரம்பலூர் மாவட்டத்தை தவிர மற்ற சில மாவட்டங்களுக்கு அனுமதியினை அரசு வழங்கியிருக்கிறது. காட்டுப்பன்றிகளால் மக்காச்சோளம், பருத்தி, நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்கள் சேதமடைவது தொடர் கதையாகி வருகிறது. இதற்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை. எனவே காட்டுப்பன்றிகளை சுட்டுப்பிடிக்கும் உத்தரவினை பெரம்பலூர் வனத்துறைக்கு அரசு வழங்க வேண்டும்.
நவீனப்படுத்தும் பணி
எறையூர் பொதுத்துறை சர்க்கரை ஆலையில், தற்போதைய அரவை பணியில் 57 ஆயிரம் டன் கரும்பு அரைக்கப்பட்டிருக்கிறது. எந்திரக்கோளாறு உள்ளிட்ட சில காரணங்களால் குறைந்த அளவே சர்க்கரை பெறப்பட்டு ஆலைக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்பாக அமைந்து விட்டது. எனவே ஆலையை நவீனப்படுத்துவது உள்ளிட்ட பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். பிரதமர் வேளாண் பயிர் காப்பீடு திட்டத்தில் காப்பீடு செய்த பயிர் களுக்கு எந்தந்த பயிர்களுக்கு எவ்வளவு இழப்பீடு என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நில அளவை மேம்பாட்டு திட்டத்திற்கு முன்பு உள்ள கிராம நிலம் சம்பந்தமான கணக்குகள், வரைபட நகல் உள்ளிட்டவற்றை விவசாயிகளால் பெற முடியவில்லை. எனவே அதனை எளிதில் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
கரும்பு நிலுவை தொகை
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் செல்லதுரை பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் மக்காச்சோளம் தற்போது 33 ஆயிரம் எக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக வேளாண்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தப்படியாக பருத்தியும் அதிகளவில் சாகுபடியாகியிருக்கிறது. எனினும் மக்காச்சோளம், பருத்திக்கு ஒரு குவிண்டாலுக்கு கொள்முதல் விலை, மத்திய அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஆதார விலையை விட ரூ.350 குறைவாக இருக்கிறது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டமடைய வாய்ப்பிருக்கிறது. எனவே அரசுவிதிப்படி மாவட்ட நிர்வாகம், “நாபிட்” என்கிற மத்திய அரசு நிறுவனத்தை பெரம்பலூருக்கு வரவழைத்து மத்திய அரசு நிர்ணயித்த விலைக்கு மக்காச்சோளம், பருத்தியை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும்.
கரும்பு நிலுவைத்தொகை வழங்கப்பட்ட விவரம், கரும்பு உற்பத்தி விவரம், எறையூர் பொதுத்துறை ஆலையில் இணை மின்சார திட்டப்பணிகள் குறித்தும், ஆலை விரிவாக்க பணிகள் குறித்தும் இனி நடக்க இருக்கும் ஒவ்வொரு குறைதீர்க்கும் நாள் கூட்டத்திலும் விவசாயிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். பசும்பலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி நிர்வாகத்தினர் வேளாண் கடன் தருவதாக விவசாயிகளின் நகைகளை வாங்கி வைத்து கொண்டனர். எனினும் கடன் வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். எனவே விவசாய கடனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
பத்து ரூபாய் நாணயம் செல்லுமா?
அகில இந்திய விவசாய சங்கத்தை சேர்ந்த நிர்வாகி ரமேஷ் பேசுகையில், பத்து ரூபாய் நாணயத்தை பெரம்பலூரில் பஸ்கள், வங்கிகளில் வாங்க மறுக்கின்றனர். எனவே இந்த நாணயம் செல்லுமா? என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும் எனக்கூறி பத்து ரூபாய் நாணயங்களை கலெக்டரிடம் காண்பித்தார். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி அவர் பேசி கொண்டிருந்த போது, பேசுகிற கால அவகாசம் முடிந்துவிட்டதாக வேளாண் அதிகாரி அலாரத்தை இயக்கி கொண்டிருந்தார். இதனால் ஆவேச மடைந்த ரமேஷ், சட்டமன்ற சபாநாயகர் போல் செயல்படுகிறீர்களே? பொறுமையாக கோரிக்கையை கேளுங்கள் என்றார். இதனால் கூட்டத்திலிருந்த கலெக்டர் மற்றும் அதிகாரிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது. மேலும் பருத்தி மறைமுக ஏலமானது கலெக்டரின் நேரடி மேற்பார்வையில் நடக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாய சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் முன்வைத்தனர். முடிவில் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சாந்தா கூறினார்.
இந்த கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதர், மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி, வேளாண்மை இணை இயக்குனர் சுதர்சன், மின்வாரிய செயற்பொறியாளர் கருப்பையா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கலைவாணி மற்றும் ராஜேந்திரன், முருகேசன், பூலாம்பாடி வரதராசன், மாணிக்கவேல், ராமசாமி உள்பட விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.