பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 67 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர்,
கரூரில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம், ஐ.என்.டி.யூ.சி., ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.சி.சி.டி.யூ., எச்.எம்.எஸ். மற்றும் ஏ.ஐ.யூ.டி.யூ.சி. ஆகிய தொழிற்சங்கங்கள் சார்பில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
பொது வினியோகத்தை உறுதிப்படுத்த வேண்டும். வேலையின்மையை போக்கி வேலை வாய்ப்பை அதிகப்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை நீக்கிவிட்டு அனைத்து தரப்பினருக்கும் குறைந்தபட்ச பென்சன் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும்.
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் பஸ் நிலையம் அருகே மறியல் போராட்டம் நடை பெற்றது.
போராட்டத்திற்கு தொழிலாளர் முன்னேற்ற சங்க கரூர் மாவட்ட தலைவர் கண்ணதாசன், சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் ஜீவானந்தம், ஐ.என்.டி.யூ.சி. மாநில பொது செயலாளர் அம்பலவாணன், ஏ.ஐ.டி.யூ.சி. மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.பி.எஸ்.வடிவேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கரூர் பஸ் நிலையம் நோக்கி வந்த பஸ்களை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 9 பெண்கள் உள்பட மொத்தம் 67 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் கரூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.