பஸ் கட்டண உயர்வை கண்டித்து அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

பஸ் கட்டண உயர்வை கண்டித்து ராசிபுரத்தில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-01-25 23:00 GMT
ராசிபுரம்,

தமிழகத்தில் பஸ் கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டது. இந்த கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் மற்றும் மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டம், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்றும் கல்லூரிக்கு வந்த மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து கல்லூரி முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, பஸ் கட்டண உயர்வை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். மேலும் பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற தமிழக அரசை வலியுறுத்தினர். இந்த போராட்டத்தில் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்