காளைவிடும் திருவிழாவில் மாடு முட்டி அ.தி.மு.க. பிரமுகர் சாவு

கசிநாயக்கன்பட்டியில் காளை விடும் திருவிழா வில் மாடு முட்டி அ.தி.மு.க. பிரமுகர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2018-01-25 23:15 GMT
திருப்பத்தூர்,

வேலூர் மாவட்டம் திருப்பத் தூரில் உள்ள கவுதம பேட்டையை சேர்ந்தவர் சங்கர் (வயது 37), அ.தி.மு.க. நகர மாணவரணி செயலாளர். கம்பி கட்டும் வேலை செய்து வந்தார்.

இவர் நேற்று முன்தினம் திருப்பத்தூர் அருகே கசிநாயக்கன்பட்டியில் நடந்த காளைவிடும் திருவிழாவை பார்க்க சென்றார். கூட்டத்தில் மாடுகளின் மீது கைகளை போட்டு உற்சாகப்படுத்தி கொண்டு இளைஞர்களுடன் நின்றார்.

மாடு முட்டி பலி

அப்போது எதிர்பாராத விதமாக மாடு சங்கர் மீது முட்டியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் சங்கருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அவர் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக சங்கர் செத்தார்.

இதுகுறித்து கந்திலி போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.

இறந்த சங்கருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், சாரஸ் (8), மோனிஸ் (7), சுதீஷ் (3) ஆகிய 3 குழந்தைகளும் உள்ளனர்.

மாடு முட்டி அ.தி.மு.க. பிரமுகர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்