கட்டண உயர்வை கண்டித்து அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்
செங்கம் அருகே பஸ் கட்டண உயர்வை கண்டித்து பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் போராட்டம் காரணமாக வேலூரில் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
செங்கம்,
பஸ் கட்டண உயர்வை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள வளையாம்பட்டில் நேற்று பொதுமக்களும், மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வலசை கிராமத்தில் இருந்து செங்கம் நோக்கி சென்ற அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பஸ் கட்டண உயர்வை கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணத்தை திரும்ப பெறக்கோரியும் கோஷங்கள் எழுப்பினர். இதுகுறித்து தகவலறிந்த செங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு பஸ்சை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களும், மாணவர்களும் மறியல் போராட்டதை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோன்று அரசு பள்ளி மாணவர்கள் போளூரில் இருந்து செங்கம் செல்லும் சாலையில் குயிலம் கூட்ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.
கல்லூரிகளுக்கு விடுமுறை
வேலூரில் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி மாணவ- மாணவிகள் கடந்த 23-ந் தேதி பஸ் கட்டண உயர்வை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். நேற்று முன்தினம் இரண்டாவது நாளாக போராட்டத்தை தொடர்ந்தனர். அதேபோன்று வேலூர் ஊரீசு கல்லூரி மாணவர்களும் நேற்று முன்தினம் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
மாணவர்களின் போராட்டம் தொடர்வதால் அவர்களின் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நேற்று முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரி மற்றும் ஊரீசு கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது. இதனால் நேற்று மாணவர்கள் கல்லூரிக்கு வரவில்லை.
குடியாத்தம் அரசு திருமகள் ஆலை கலைக்கல்லூரி மாணவ-மாணவிகளும் 2 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நேற்று கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டது. வருகிற 29-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் வழக்கம்போல் கல்லூரி செயல்படும் என்று கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.