தொழிலாளி தீக்குளித்து சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக உரிமையாளர்கள் 2 பேர் கைது

தொழிலாளி தீக்குளித்து சாவு: தற்கொலைக்கு தூண்டியதாக பூக்கடை உரிமையாளர்கள் 2 பேர் கைது

Update: 2018-01-25 22:15 GMT

திருக்காட்டுப்பள்ளி,

திருக்காட்டுப்பள்ளி ஒன்பத்துவேலி பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (வயது58). இவர் கடந்த 22–ந்தேதி தான் வேலை பார்த்த பூக்கடை முன்பு தீக்குளித்தார். இந்தநிலையில் படுகாயத்துடன் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ராஜ்குமார் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். விசாரணையில் பூக்கடை உரிமையாளர்கள் ராஜ்குமாரிடம் கொடுத்த பணத்தை கேட்டு திட்டி அவமானப்படுத்தியதால் தீக்குளித்து இறந்தது தெரியவந்தது. இதையடுத்து ராஜ்குமாரை தற்கொலைக்கு தூண்டியதாக பூக்கடை உரிமையாளர்கள் சந்தோஷ்குமார், வினோத், மணிகண்டன் ஆகியோர் மீது திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து, சப்–இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா ஆகியோர் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து ராஜ்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது தந்தை மகாலிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இந்தநிலையில் ராஜ்குமாரை தற்கொலைக்கு தூண்டியதாக பூக்கடை உரிமையாளர்கள் சந்தோஷ்குமார் (33), மணிகண்டன்(25)ஆகிய 2 பேரையும் திருக்காட்டுப்பள்ளி போலீசார் கைது செய்து திருவையாறு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

மேலும் செய்திகள்