பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பஸ் கட்டணத்தை உயர்த்திய தமிழகஅரசை கண்டித்தும், பஸ் கட்டணத்தை உடனே திரும்ப பெற கோரியும் மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தஞ்சை ரெயிலடியில் நேற்றுமாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2018-01-25 22:45 GMT

தஞ்சாவூர்,

பஸ் கட்டணத்தை உயர்த்திய தமிழகஅரசை கண்டித்தும், பஸ் கட்டணத்தை உடனே திரும்ப பெற கோரியும் மத்திய மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தஞ்சை ரெயிலடியில் நேற்றுமாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் சொக்கா.ரவி தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் அறிவுடைநம்பி, ஒன்றிய செயலாளர் சிலம்பரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் வினோத் வரவேற்றார். இதில் மண்டல செயலாளர்கள் வீரன்.வெற்றிவேந்தன், விவேகானந்தன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கையை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் முருகானந்தம், மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் கருணாகரன், நிர்வாகிகள் விஜயன், சுரேந்தர், சந்திரசேகர், அறிவுக்கரசு மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநகர செயலாளர் தமிழ்முதல்வன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்