மின்நிலையத்துக்கு அமைக்கப்படும் உயர் மின் கோபுரங்களால் விவசாய நிலங்கள் கடும் பாதிப்பு, விவசாயிகள் கலெக்டரிடம் முறையீடு
மின்நிலையத்துக்கு அமைக்கப்படும் உயர் மின் கோபுரங்களால் விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டரிடம் நேற்று விவசாயிகள் முறையிட்டனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் தங்கள் குறைகளை மனுக்களாக கொடுத்து முறையிட்டனர்.
கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் மதுசூதனன் பேசியதாவது:-
தாராபுரம் அருகே இச்சிப்பட்டி கிராமத்தில் புகளூர் மின்நிலையம் என்ற பெயரில் பெரிய மின்நிலையம் அமைக்க உள்ளதாக தெரிகிறது. இந்த மின்நிலையத்துக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 30-க்கும் மேற்பட்ட உயர்மின் அழுத்த பாதைகள் அமைப்பதற்காக தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மின்நிலையத்துக்கு தமிழகத்தில் காற்றாலைகள் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை கொண்டு வருவதற்கான உயர் அழுத்த மின்பாதைகளும், தமிழகத்தில் பிற பகுதியில் உற்பத்தியாகும் சூரியசக்தி மின்சாரத்தையும் கொண்டு வருவதற்கான உயர் அழுத்த மின்பாதைகளும் அமைக்கப்படுகிறது.
காற்றாலை மற்றும் சூரியசக்தி மின்சாரத்தை தனியார் நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன. இந்த மின்சாரத்தை லாபநோக்கத்தோடு எந்த மாநிலத்தில் அதிக விலை கிடைக்கிறதோ அங்கு கொண்டு செல்வதற்காக இந்த மின்பாதை அமைக்கப்படுகிறது. தமிழகத்தில் இருந்து சத்தீஸ்கர் உள்பட வடமாநிலங்களுக்கு வங்கி நிதியுதவியுடன் இந்த திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன.
இந்த உயர்மின் கோபுரங்கள் மற்றும் பாதைகள் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டால் அந்த நிலத்தில் நீண்ட காலப்பயிர்களை பயிர் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த மின்பாதைகளுக்கு கீழ் ஆழ்குழாய் கிணறுகளோ, பண்ணைகளோ, பிற கட்டுமானங்களோ அமைக்க முடியாது. இந்த நிலங்கள் பயனற்றதாக மாறி விடும். மின்பாதைகள் செல்லும் வழியில் நிலம் உள்ள விவசாயிகள் வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்படும். இந்த நிலங்களை விற்கவோ, அடமானம் வைக்கவோ முடியாது. இந்த நிலங்களுக்கு வங்கிகள் கடன் கொடுக்கவும் முன்வராது. மின்பாதை எந்த வழியாக செல்கிறது என்பது குறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்காமல், ஆலோசனை கூட்டம் நடத்தாமல் திட்டத்தை செயல்படுத்து கிறார்கள்.
எந்தெந்த கிராமத்தின் வழியாக, யாருடைய விவசாய நிலத்தின் வழியாக எந்தெந்த அளவுகளில் மின்பாதைகள் அமைக்கப்படுகிறது என்பதை வெளிப்படையாக மாவட்ட நிர்வாகம் அறிவிக்க வேண்டும்.
மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பவர் கிரிட், தமிழ்நாடு மின்சார வாரியம், விவசாய பிரதிநிதிகளை கொண்ட குழுக்களை அமைத்து விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். அதுவரை வேலைகளை நிறுத்தி வைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.
உயர்மின்பாதைகள், கோபுரங்கள் அமைக்கும் இடங்களுக்கு வாடகை அல்லது லாபத்தில் பங்கு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கொங்கு ராஜாமணி(தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்) பேசும்போது, மின்பாதை அமைக்கப்படும் விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிய பின்னர் திட்டப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். பல பகுதிகளில் பெரிய மின் திட்டங்களை கேபிள்கள் மூலம் நிறைவேற்றியுள்ளனர். இந்த மின்திட்டத்தையும் கேபிள்கள் மூலம் சாலையோரங்களில் பதித்து நிறைவேற்ற வேண்டும் என்றார்.
இதற்கு பதில் அளித்து பேசிய கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி, விவசாயிகள், மத்திய அரசின் பவர்கிரிட், தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் சார்பில் குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்றார்.
ஈஸ்வரமூர்த்தி(உழவர் உழைப்பாளர் கட்சி) பேசும்போது, பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு 2,400 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நெல் பயிரிடப்பட்டு நெல்மணி பிடித்துள்ளது. கூடுதலாக 2 நாட்கள் தண்ணீர் கிடைத்தால் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். தாராபுரம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும் என்றார்.
நெல் கொள்முதல் நிலையங்களை உரிய காலத்தில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பதில் அளித்தார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பிரசன்னா ராமசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் குமார், வேளாண்மை துறை இணை இயக்குனர் முகமது இக்பால், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) அரசப்பன், துணை கலெக்டர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.