கடலூர் முதுநகரில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

பஸ் கட்டண உயர்வை கண்டித்து கடலூர் முதுநகரில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2018-01-25 21:45 GMT
கடலூர் முதுநகர்,

பஸ் கட்டண உயர்வை கண்டித்து பா.ம.க.சார்பில் கடலூர் முதுநகரில் ஆர்ப்பாட் டம் நடந்தது. இதற்கு மாநில துணை பொதுச்செயலாளர் தாமரைக்கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செய லாளர் சண்.முத்து கிருஷ் ணன் வரவேற்றார். மாவட்ட செய லாளர்கள் ஆறுமுகம், சுரேஷ், முருகன், மாவட்ட தலைவர்கள் ராஜ்குமார், ராஜசேகர், ஜெகன், குமரவேல், அமைப்பு செயலா ளர் ஸ்டா லின் ஆகி யோர் முன் னிலை வகித்தனர். சிறப்பு அழைப் பாளராக மாநில துணை தலைவர் வெங்கடா சலபதி, சொத்து பாதுகாப்பு குழு தலைவர் கோவிந்தசாமி, மாநில துணை பொது செய லாளர் அசோக் குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில், பஸ் கட்டண உயர்வை கண்டித்தும், கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரியும் பா.ம.க.வினர் கண்டன கோஷங்களை எழுப் பினர். இதில் மாநில துணை தலைவர்கள் சண்முகம், சந்திர பாண்டியன், தேர்தல் பணிக் குழு தனபால், முன்னாள் மாநில துணை பொதுச் செயலாளர் தர்மலிங் கம், முன்னாள் மாவட்ட செயலாளர் ஜெகன், மாவட்ட அமைப்பு செயலாளர் வெங்கடேசன், மாநில செயற்குழு உறுப்பினர் போஸ் ராமசந்திரன், மாநில உழவர் பேரியக்க துணை தலைவர் கணிபதி, மாவட்ட அமைப்பு செயலாளர் சக்திவேல், மாவட்ட துணை செயலாளர் ராஜா, மாவட்ட தொண்டரணி செயலாளர் குமரவேல் மாவட்ட இளைஞரணி தலைவர் வாட்டர்மணி உள்பட பலர் கலந்து கொண் டனர். முடிவில் நகர தலைவர் மதி நன்றி கூறினார். 

மேலும் செய்திகள்