‘ஓட்டல்களில் ஆய்வு பணியில் ஈடுபடமாட்டோம்’ தீயணைப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை

மும்பை கமலா மில் வளாகத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தில் தீ விபத்து நடந்த ஓட்டலுக்கு தடையில்லா சான்று கொடுத்த தீயணைப்பு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

Update: 2018-01-25 22:45 GMT

மும்பை,

இதை கண்டித்து ஏற்கனவே தீயணைப்பு அதிகாரிகள் கூண்டோடு ராஜினாமா செய்யப்போவதாக எச்சரிக்கை விடுத்து இருந்தனர். இந்தநிலையில் மும்பை தீயணைப்பு அதிகாரிகள் சங்கத்தினர் மாநகராட்சி கமி‌ஷனர் அஜாய் மேத்தாவிடம் கடிதம் ஒன்றை கொடுத்து உள்ளனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–

தீயணைப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் எங்களுக்கு ஓட்டலில் ஆய்வு பணியை மேற்கொள்வது கூடுதல் பணிசுமையை தரும். தீயணைப்பு துறையில் தற்போது உள்ள கட்டமைப்பு ஆங்கிலேயர்கள் காலத்தில் கொண்டு வரப்பட்டது ஆகும். எனவே இதில் மாற்றங்களை செய்யவேண்டும். தீயணைப்பு துறை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் நலன் பாதுகாக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து தீயணைப்பு அதிகாரிகள் சங்க செயலாளர் கூறுகையில், ‘‘நாங்கள் கடிதத்தில் கூறியுள்ள கோரிக்கைகள் குறித்து 31–ந்தேதிக்குள் உரிய பதில் கிடைக்கவில்லையென்றால் அடுத்த மாதம் முதல் ஓட்டல்களில் ஆய்வு பணியை மேற்கொள்ள மாட்டோம்’’ என்றார்.

மேலும் செய்திகள்