12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட 92 பேர் கைது
12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட 92 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஊட்டி,
ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., எல்.பி.எப். ஆகிய மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் போஜராஜ் (ஏ.ஐ.டி.யு.சி.) தலைமை தாங்கினார். மாநில செயலாளர் செல்வராஜ் (எல்.பி.எப்.), குணசீலன் (எல்.பி.எப்.) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மத்திய தொழிற்சங்கத்தினர் கோஷம் எழுப்பியபடி, சிறிது தூரம் நடந்து சென்று சாலையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட மத்திய தொழிற்சங்கத்தினரை கைது செய்து வேனில் ஏற்றினர்.
இதுகுறித்து சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ஆல்தொரை கூறியதாவது:- மத்திய, மாநில அரசுகள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். தொழிலாளர் நல சட்டங்களை தன்னிச்சையாக திருத்தக்கூடாது. குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். அனைத்து தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்களில் பணிபுரியும் இடங்களில் பாலியல் புகார் பெட்டிகள் வைக்க வேண்டும். பஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்பட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மத்திய தொழிற்சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக தேவலாவில் 25 பேரும், மஞ்சூரில் 48 பேர், ஊட்டியில் 19 பேர் என மொத்தம் 92 பேரை போலீசார் கைது செய்தனர்.