தம்பதியின் உல்லாச வீடியோ : ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டிய 3 பேர் கைது

பழுது நீக்க வந்த செல்போனில் இருந்த தம்பதியின் உல்லாச வீடியோவை வைத்து ரூ.20 லட்சம் கேட்டு மிரட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-01-25 21:45 GMT
அம்பர்நாத்,

தம்பதியிடம் பணம் வாங்க வந்தபோது போலீசாரிடம் சிக்கினர்.

தானே மாவட்டம் உல்லாஸ்நகரை சேர்ந்த ஒருவரின் விலை உயர்ந்த செல்போன் அண்மையில் பழுதானது. அதே பகுதியை சேர்ந்த அவினாஷ் ஷிண்டே(வயது20) என்ற வாலிபரிடம் பழுது பார்த்து தரும்படி அவர் செல்போனை கொடுத்து இருந்தார். செல்போனை பழுது நீக்கி பார்த்தபோது, செல்போனை கொடுத்தவர் தனது மனைவியுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோ இருப்பதை அவினாஷ் ஷிண்டே பார்த்துள்ளார். இதனையடுத்து அந்த வீடியோ காட்சியை தனது செல்போனுக்கு அவர் பதிவிறக்கம் செய்தார்.  பின்னர் அதனை தனது நண்பர்களான பிரதீப் மோரே(28), ருஷிகேஷ்(22) ஆகியோரிடம் அவர் காண்பித்து உள்ளார்.

பின்னர் 3 பேரும் சேர்ந்து தம்பதியை மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டனர். இதையடுத்து பிரதீப் மோரே தம்பதியை தொடர்பு கொண்டு பேசி, இருவரும் நெருக்கமாக இருக்கும் வீடியோ தன்னிடம் இருப்பதாக கூறினார். மேலும் அதை இணையதளத்தில் வெளியிடாமல் திருப்பி தர வேண்டுமெனில் ரூ.20 லட்சம் தர வேண்டும் என மிரட்டினார்.

இதைக்கேட்ட தம்பதி அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து உடனடியாக அவர்கள் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.

பின்னர் போலீசார் கொடுத்த யோசனைப்படி பணம் தருவதாக கூறி, கல்யாண் பகுதிக்கு வரும்படி பிரதீப் மோரேவை அவர்கள் அழைத்தனர். இதனை நம்பிய அவர் தனது கூட்டாளிகளான அவினாஷ் ஷிண்டே, ருஷிகேஷ் ஆகியோருடன் குறிப்பிட்ட இடத்திற்கு சென்றார். அப்போது, அங்கு மறைந்து இருந்த போலீசார் அவர்கள் 3 பேரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களிடம் இருந்த ஆபாச வீடியோவையும் பறிமுதல் செய்தனர். பின்னர் கைதான 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்