விருகம்பாக்கத்தில் கூவம் ஆற்றில் மிதந்த பச்சிளம் குழந்தை உடல் மீட்பு
விருகம்பாக்கத்தில் கூவம் ஆற்றில் மிதந்த பச்சிளம் குழந்தை உடலை மீட்ட போலீசார், அந்த குழந்தையின் பெற்றோர் யார்? என விசாரித்து வருகின்றனர்.
கோயம்பேடு,
சென்னை விருகம்பாக்கம் காளியம்மன் கோவில் தெரு கூவம் ஆற்றுப்பாலம் பகுதியில் நேற்று காலை கூவம் ஆற்றில் பச்சிளம் குழந்தை உடல் மிதந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி பொதுமக்கள், போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கோயம்பேடு போலீசார், கூவம் ஆற்றில் மிதந்த குழந்தையின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அது ஆண் குழந்தை என்பதும், தொப்புள் கொடியுடன் இருப்பதும் தெரிந்தது.
குழந்தை பிறந்த உடனேயே அதனை கூவம் ஆற்றில் வீசி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
குழந்தையின் உடல் உப்பிய நிலையில் காணப்பட்டது. எனவே குழந்தை இறந்து 2 நாட்களுக்கு மேல் இருக்கலாம் என்று தெரிகிறது. பின்னர் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குழந்தையின் பெற்றோர் யார்? என்று தெரிய வில்லை. கள்ளக்காதலில் பிறந்ததால் கூவம் ஆற்றில் வீசி குழந்தை கொலை செய்யப்பட்டதா? அல்லது குழந்தை இறந்து பிறந்ததால் ஆற்றில் வீசப்பட்டதா? என்பது குறித்து கோயம்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.