ஏ.டி.எம். மையத்தில் ரூ.28 லட்சம் கொள்ளை: வங்கி ஊழியர் கைது

ஏ.டி.எம். மையத்தில் உள்ள எந்திரத்தில் ரூ.28 லட்சத்தை கொள்ளையடித்துவிட்டு தலைமறைவான வங்கி ஊழியரை 1½ ஆண்டுகளுக்கு பிறகு போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2018-01-25 21:45 GMT

மும்பை,

மும்பை அந்தேரி கிழக்கில் உள்ள தனியார் வங்கியில் தொழில்நுட்ப ஊழியராக பணியாற்றி வந்தவர் ஹித்தேஷ் (வயது32). இந்தநிலையில் கடந்த 2016–ம் ஆண்டு ஜூலை 26–ந் தேதி அங்குள்ள வங்கியின் ஏ.டி.எம். எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து கோளாறை சரிசெய்ய ஹித்தேஷ் அனுப்பி வைக்கப்பட்டார்.

இதில், அவர் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த ரூ.28 லட்சத்தை கொள்ளை அடித்துவிட்டு தலைமறைவானார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஹித்தேசை வலைவீசி தேடிவந்தனர்.

ஆனால் அவர் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தார். இந்தநிலையில் ஹித்தேஷ் ஜார்கண்ட் மாநிலம் கர்வா பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார், சுமார் ஒரு வாரம் கண்காணித்து ஹித்தேசை கைது செய்தனர்.

இந்த வழக்கில் 1½ ஆண்டுகளுக்கு பிறகு ஹித்தேசை போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை மும்பை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்