தேவதானப்பட்டி அருகே சோதனை சாவடியில் லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
தேவதானப்பட்டி அருகேயுள்ள, சோதனை சாவடியில் லஞ்சம் வாங்கிய போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
தேனி,
திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில், தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே காட்ரோடு பகுதியில் போலீஸ் சோதனை சாவடி அமைந்துள்ளது. இந்த சோதனை சாவடியில் பணியில் ஈடுபட்டு இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டியிடம் லஞ்சம் வாங்குவது போன்ற ஒரு வீடியோ நேற்று முன்தினம் இரவில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் இந்த வீடியோவை பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதில், அந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சோதனை சாவடியில் அமர்ந்து கொண்டு, பேரம் பேசி லஞ்சம் வாங்குவது போன்றும், வாங்கிய லஞ்சப் பணத்தை இருக்கை முன்பு ஒரு அட்டைக்கு கீழ் மறைத்து வைப்பது போன்றும் காட்சிகள் இடம் பெற்று இருந்தன.
மேலும், அந்த வீடியோவில் அந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், ‘ரூ.50 கொடுத்துவிட்டு போ. கணக்கு பார்க்காதே. ரூ.500 கொடுக்க வேண்டும். உனக்காக ரூ.50. ஜீப் ஆக இருந்தால் ரூ.100 கொடுப்பாங்க. கேரளா வண்டியாக இருந்தால் ரூ.200 கொடுப்பார்கள். உனக்காக ரூ.50. படக்குனு எடு’ என்று பேசுவது போல், அந்த வீடியோவில் ஒலிக்கிறது.
இந்த வீடியோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் செல்போன் எண்ணுக்கும், வாட்ஸ்-அப் மூலம் சிலர் அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து அவர் விசாரணை நடத்தினார். வீடியோவில் லஞ்சம் வாங்கிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் என்பதும், அவர் பெரியகுளம் தென்கரை போலீஸ் நிலையத்தில் பணியாற்றுவதும், இந்த சம்பவம் கடந்த 21-ந்தேதி நடந்துள்ளதும் தெரியவந்தது. மேலும், திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற கார் டிரைவரிடம் லஞ்சம் வாங்கியதாகவும் தெரியவந்தது.
இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வரத ராஜனை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் நேற்று பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
அதே நேரத்தில் சமூக வலைதளங்களில் இந்த சம்பவத்துக்கு கடுமையான கண்டனங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. சோதனை சாவடிகளில் லஞ்சம் வாங்குவது தொடர் கதையாக உள்ளதாகவும், மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள போதிலும் வாகன தணிக்கையை முறையாக செய்யாமல் லஞ்சம் வாங்கிக் கொண்டு வாகனங்களை விட்டு விடுவதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். எனவே, சோதனை சாவடிகளில் நேர்மையான போலீசாரை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.