தூத்துக்குடியில் கட்டிட தொழிலாளியை கொலை செய்தது ஏன்? கைதான கள்ளக்காதலியின் 2 மகன்கள் பரபரப்பு வாக்குமூலம்

தூத்துக்குடியில், கட்டிட தொழிலாளியை கொலை செய்ததாக, நேற்று அவருடைய கள்ளக்காதலியின் 2 மகன்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-01-25 20:30 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடியில், கட்டிட தொழிலாளியை கொலை செய்ததாக, நேற்று அவருடைய கள்ளக்காதலியின் 2 மகன்களை போலீசார் கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து அவர்கள் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்து உள்ளனர்.

கட்டிட தொழிலாளி

தூத்துக்குடி மடத்தூர் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த பால் மகன் மாரி என்ற வாத்து மாரி(வயது 40). கட்டிட தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் மாலதி. இவர், கருத்து வேறுபாடு காரணமாக கணவர் சித்திரையை பிரிந்து 2 மகன்களுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மாலதிக்கும், மாரிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து மாலதியும், மாரியும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இவர்களுடன், மாலதியின் மகன்களான மாரிமுத்து(27), சுரேஷ்(25) ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

கடந்த சில மாதங்களாக தந்தையுடன் சேர்ந்து வாழ வேண்டும் என மாலதியிடம் மகன்கள் வலியுறுத்தி வந்துள்ளனர். ஆனால், மாலதி இதற்கு சம்மதிக்கவில்லை என கூறப்படுகிறது. இதற்கு மாரி தான் காரணம் என மகன்களுக்கு கோபம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு மாரி, அந்த பகுதியில்உள்ள கல்லறைத் தோட்டத்தில் அரிவாளால் வெட்டியும், தலையில் கல்லை போட்டும் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

2 பேர் கைது

சந்தேகத்தின் பேரில் மாலதியின் மகன்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த 2 பேரும் மாரியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளனர். அந்த 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் போலீசாரிடம் கொடுத்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியதாவது:–

தந்தையுடன் வாழ ஆசை

நாங்கள், அப்பா சித்திரையுடன் சேர்ந்து வாழ விரும்பினோம். இது தொடர்பாக அம்மா மாலதியிடம் பலமுறை கேட்டோம். ஆனால் அப்பாவுடன் சேர்ந்து வாழ, அவர் சம்மதிக்கவில்லை. இதற்கு அவருடன் சேர்ந்து வாழ்ந்து வரும் மாரிதான் காரணம் என்று நினைத்தோம். இதனால் அவரை கொலை செய்ய முடிவு செய்தோம்.

கொலை செய்தோம்

 கடந்த 21–ந் தேதி மாரி மது குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்தார். இதனால் அவரை அருகில் உள்ள கல்லறை தோட்டத்துக்கு அழைத்து சென்றோம். அங்கு வைத்து அவருடன் சேர்ந்து நாங்களும் மது குடித்தோம். அப்போது, மாரிக்கு போதை அதிகமானதும், மறைத்து வைத்து இருந்த அரிவாளால், அவரை வெட்டியும், தலையில் கல்லை போட்டும் கொலை செய்தோம்’ என்று கூறினர்.

மேலும் செய்திகள்