சாப்பிடப் போறீங்களா? இதைக் கவனிங்க...

உணவருந்தும் போது கடைப்பிடிக்க வேண்டிய சில வி‌ஷயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

Update: 2018-01-25 22:45 GMT
ணவு– மனிதனுக்கு அத்தியாவசியமானது, அதே நேரம் மனிதன் போதும் என்று சொல்லக்கூடிய ஒரே பொருள். நாம் உண்ணும் உணவில் இறைவன் வாசம் செய்வதாக சொல்லப்படுகிறது. எனவே அதற்கான மரியாதையை நாம் வழங்க வேண்டும்.

உணவு உண்பதற்கு முன்பு கை, கால், வாய் போன்றவற்றை நீரால் சுத்தம் செய்ய வேண்டும். காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும். உணவு உண்ணும் போது பேசக் கூடாது. இடதுகையை கீழே ஊன்றியபடியோ, டி.வி. பார்த்தபடியோ, படித்தபடியோ உணவருந்தக் கூடாது. உணவு உண்ணும் போது உண்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

வீட்டுக் கதவை திறந்து வைத்துக் கொண்டு, வாசலுக்கு எதிரே அமர்ந்து சாப்பிடக்கூடாது. காலணி அணிந்து கொண்டு சாப்பிடுவதும் நல்லதல்ல. சூரிய உதயத்தின் போதும், அஸ்தமனத்தின் போதும் உணவருந்துவதை தவிர்த்திடுங்கள். இருட்டிலோ, நிழல்படும் இடங்களிலோ இருந்தபடி சாப்பிடக்கூடாது. சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, இடையில் எழுந்து சென்று விட்டு, மீண்டும் வந்து உணவருந்துவதை கூடுமானவரை தவிர்ப்பது நல்லது. சாப்பாட்டு தட்டை கையில் எடுத்து வைத்தபடியோ, மடியில் வைத்துக் கொண்டோ சாப்பிட வேண்டாம். சிலர் இலையில் கடைசி பருக்கை வரை சாப்பிட்ட பிறகும், வழித்து எடுத்து சாப்பிடுவார்கள். இன்னும் சிலர் கையில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஓரிரு சாதத்தை வாய்க்குள் விரலை விட்டு உறிஞ்சி சாப்பிடுவார்கள். இதுபோன்று செய்வது தரித்திரத்தை வளர்க்கும் என்பதை மறந்து விட வேண்டாம். அதே போல கோபமாக இருக்கும் போது உணவருந்துவதை விட்டுவிடுங்கள்.

இரவு நேரத்தில் எள் கொண்டு தயார் செய்த உணவை தவிர்த்திடுங்கள். அதே போல், பாகற்காய், தயிர், நெல்லிக்காய், இஞ்சி, கீரை, கஞ்சி போன்றவற்றையும் இரவில் உண்ண வேண்டாம். ஒரே நேரத்தில் பல வித பழங்களைச் சாப்பிடுவதும் நல்லதல்ல. நாம் சாப்பிடும் தட்டிலோ, இலையிலோ முதலில் சாதத்தை பரிமாறக்கூடாது. காய்கறி, அப்பளம் அல்லது உப்பைத் தான் முதலில் பரிமாற வேண்டும். அதே போல முதலில் கீரையோ, வத்தலோ இலையில் வைக்கக் கூடாது. அசுப காரியத்தில் மட்டுமே இதுபோன்று பயன்படுத்துவார்கள்.

புரச இலையில் சாப்பிட்டால் புத்திக்கூர்மை வளரும். வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் நல்ல அழகு, அறிவு, மன ஒருமைப்பாடு, குடும்ப ஒற்றுமை கிடைக்கும்.

மேலும் செய்திகள்