நுகர்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு தடை
நுகர்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மும்பை,
சிறிய கடைகள் மற்றும் விற்பனை நிலையங்களில் நுகர்பொருளுடன் சேர்த்து புகையிலை பொருட்களை விற்பனை செய்ய தடை விதித்து மராட்டிய அரசின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை கமிஷனர் பல்லவி தாரே கூறுகையில், “ மராட்டியத்தில் சிறிய கடைகள் முதல் பெரிய விற்பனை நிலையங்கள் வரை அனைத்து இடங்களிலும் நுகர்பொருளுடன் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இதைபார்க்கும் குழந்தைகள், இளம் வயதினர் இந்த புகையிலை பொருட்களால் ஈர்க்கப்படும் அபாயம் உள்ளது. எனவே இதை தடுக்கும் வகையில், நுகர்பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் விற்பனை நிலையங்களில் புகையிலை பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது ” என்றார்.