உடையார்பாளையம்,
உடையார்பாளையம் அருகே மணகெதி காலனி தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை மனைவி வசந்தா (வயது 40). அதே தெருவை சேர்ந்த கலியபெருமாள் மகன்கள் கமல்ராஜ் (24), கனகராஜ்(26). இவர்கள் குடும்பத்திற்கும், வசந்தாவிற்கும் இடையே நிலப்பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த கமல்ராஜ், கனகராஜ் ஆகிய இருவரும் சேர்ந்து வசந்தாவை தாக்கியுள்ளனர். இதுகுறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் வசந்தா புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து கமல்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். தலைமறைவான கனகராஜை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.