பஸ் கட்டண உயர்வை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பஸ் கட்டண உயர்வை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி யினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-01-24 22:45 GMT
நாகப்பட்டினம்,

நாகை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அவுரித்திடலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழக அரசின் பஸ் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பரிமளசெல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் பேரறிவாளன், விவசாய அணி மாவட்ட செயலாளர் பிரபாகரன், மாவட்ட அமைப்பாளர் மாதவன், தொகுதி செயலாளர் அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு அறிவித்த பஸ் கட்டண உயர்வை கண்டித்தும், அதனை உடனே திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மாவட்ட பொருளாளர் கதிர்நிலவன், ஒன்றிய செயலாளர்கள் பரமானந்தம், வடிவேல், புரட்சியாளன், புஷ்பராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வேதாரண்யம்

அதேபோல பஸ் கட்டண உயர்வை கண்டித்து, நாகை தெற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் போஸ் தலைமையில் வேதாரண்யத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கனகராஜ் முன்னிலை வகித்தார். இதில் இளைஞர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திரளான பேர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பஸ் கட்டண உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். 

மேலும் செய்திகள்