வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் கூறினார்.

Update: 2018-01-24 22:45 GMT
மன்னார்குடி,

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், மன்னார்குடியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் வறட்சியாலும், வெள்ளத்தாலும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆதலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களில் தற்போது முதற்கட்ட சம்பா சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆதலால் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொள்முதல் குறித்து அமைச்சர்கள், வேளாண்மை துறை அதிகாரிகள், விவசாயிகள் கொண்ட முத்தரப்பு கூட்டம் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடைபெறுவது வழக்கம். ஆதலால் இந்த கூட்டத்தை உடனடியாக நடத்த வேண்டும். ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது தஞ்சை மண்டல தலைவர் ராஜேந்திரன், மன்னார்குடி ஒன்றிய தலைவர் மனோகரன் ஆகியோர் உடனிருந்தனர். 

மேலும் செய்திகள்