பாலாற்று கிணற்றில் பிணமாக கிடந்த கட்டிட மேஸ்திரி கொலை செய்யப்பட்டாரா? போலீஸ் விசாரணை
வேலூர் பாலாற்றில் உள்ள கிணற்றில் மேஸ்திரி ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
வேலூர்,
வேலூர் சத்துவாச்சாரி நேதாஜி நகரில் இருந்து காங்கேயநல்லூர் செல்லும் வழியில் பாலாற்றில் கிணறு ஒன்று உள்ளது. இந்த வழியாக நேற்று காலை சென்ற பொதுமக்கள் கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது கிணற்றில் சுமார் 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். அவருடைய உடல் அழுகிய நிலையில் இருந்தது. எனவே அவர் இறந்து 3 நாட்களுக்கு மேல் இருக்கும் என்று கூறப்பட்டது.
பிணமாக கிடந்த வாலிபர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று பிணமாக கிடந்த வாலிபரின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக வாலிபரின் உடல் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கடந்தசில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் பாலாற்றங்கரையில் உள்ள ஒரு விவசாய கிணற்றில் பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவருடைய உடலை விருதம்பட்டு போலீசார் மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரு வாரமாகியும் அவர் யார்? என்பது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் அதே பகுதியில் வாலிபர் ஒருவர் கிணற்றில் பிணமாக கிடந்ததால் இவருடைய சாவில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டது. அவரை யாரும் கொலைசெய்து பிணத்தை கிணற்றில் வீசியிருக்கலாம் என்று கூறப்பட்டது.
கட்டிட மேஸ்திரி
இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கிணற்றில் பிணமாக கிடந்த வாலிபர் சத்துவாச்சாரியை சேர்ந்த நாராயணராவ் என்பவருடைய மகன் கணேஷ் (30) என்பது தெரியவந்தது. அவர் கட்டிட மேஸ்திரியாக வேலைபார்த்து வந்தார். இவரை யாரும் கொலை செய்தார் களா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.