தர்மபுரி-சேலம் ரோட்டில் அடுத்தடுத்து லாரிகள் மோதின சாலையை கடக்க நின்றிருந்த பெண் சாவு
தர்மபுரி- சேலம் ரோட்டில் லாரிகள் அடுத்தடுத்து மோதிய விபத்தில், சாலையை கடக்க நின்றிருந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நல்லம்பள்ளி,
குஜராத்தில் இருந்து தேனி மாவட்டத்துக்கு கொத்தமல்லி பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி தர்மபுரி-சேலம் ரோட்டில் சென்று கொண்டிருந்தது. இதனை நாமக்கல்லை சேர்ந்த டிரைவர் செல்வராஜ் (வயது 47) என்பவர் ஓட்டிச்சென்றார்.
அதே போல ஒடிசாவில் இருந்து கொச்சிக்கு பிளாஸ்டிக் குழாய்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்றது. அந்த லாரியை சேலம் ஜலகண்ட புரத்தை சேர்ந்த கார்த்தி (32) என்பவர் ஓட்டிச்சென்றார்.
தர்மபுரி-சேலம் 4 வழிச்சாலையில் தொப்பூர் பகுதியில் சென்ற போது, பிளாஸ்டிக் பாரம் ஏற்றிய லாரி, முன்னால் சென்று கொண்டிருந்த கொத்தமல்லி பாரம் ஏற்றிய லாரியின் பின்புறத்தில் மோதியது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி, சாலையின் தடுப்பில் மோதியது. அப்போது அங்கு சாலையை கடக்க நின்றிருந்த பெண் மீது மோதி விட்டு, ரோட்டின் எதிர் பகுதிக்குள் புகுந்தது. அங்கு நின்றிருந்த டேங்கர் லாரி மீது மோதி நின்றது.
இதே போல பிளாஸ்டிக் பாரம் ஏற்றி வந்த லாரி சாலையோரம் நின்றிருந்த கன்டெய்னர் லாரி மீது மோதியது. இந்த விபத்தில் 4 லாரிகள் சேதம் அடைந்தன. மேலும் லாரி மோதியதில் படுகாயம் அடைந்த பெண்ணை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் லாரி டிரைவர்கள் செல்வராஜ், கார்த்தி ஆகியோர் லேசான காயத்துடன் தப்பினர்.
விபத்தில் பலியான பெண் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் தொப்பூர் பகுதியை சேர்ந்த தீர்த்தகிரி என்பவரின் மனைவி பழனியம்மாள் (41) என்பதும், கூலிதொழிலாளியான அவர் பணி முடிந்து வீட்டுக்கு திரும்புவதற்காக சாலையின் நடுவே உள்ள தடுப்பில் நின்றிருந்த போது லாரி மோதியதும் தெரியவந்தது.
கண்இமைக்கும் நேரத்தில் லாரிகள் அடுத்தடுத்து மோதிய விபத்து காரணமாக தர்மபுரி-சேலம் சாலையில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.